நிறுவனத்தின் மிகச்சிறிய SUV பற்றிய தகவல்களை வெளியிட்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் - இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ஹூண்டாய்

இந்த கார் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தைப் பெறும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  • Share this:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியை பற்றிய தகவல்களை வெளியிட்ட சில நாட்களிலேயே, ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய ஒரு மைக்ரோ எஸ்யூவி காரை பற்றி உலகளாவிய அறிமுகத்தை ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக செய்துள்ளது. இந்த புதிய வாகனத்திற்கு காஸ்பர் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நியூ ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper) என்ற மைக்ரோ எஸ்யூவி வாகனத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது ஹூண்டாய்.

டாடா பஞ்ச், மாருதி சுசுகி இக்னிஸ், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் போன்ற மற்ற கார்களுடன் போட்டியிடும் இந்த கார், 2022-க்குள் தென்கொரியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டிசைன் பற்றி பேசுகையில் ஹூண்டாய் காஸ்பர் மிகவும் யூத் ஃபுல்லான டிசைனை கொண்டுள்ளது மற்றும் மிகவும் தனித்துவமான லுக்குடன் வருகிறது. இது ஹூண்டாய் போர்ட்ஃபோலியோவில் மிகச்சிறிய எஸ்யூவி ஆகும். இந்த கார் 2,400 மிமீ வீல்பேஸ் மற்றும் 3,595 மிமீ நீளம் மற்றும் 1,595 மிமீ அகலம் , 1,575 மிமீ உயரம் கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கார் கீழே உள்ள பம்பரில் அமைந்துள்ள ரவுண்டட் ஹெட்லேம்ப்களுடன் ரெட்ரோ தீம் ஸ்டைலிங்கை பெற்றுள்ளது. LED DRL-க்கள் மேலே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்புற பம்பர் ஒரு சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் ஜூவல் தீம் எல்இடி லைடட்ஸ்களுடன் வருகிறது. இது த்ரீ-டோர் மைக்ரோ-எஸ்யூவி போல வடிவமைக்கப்பட்டுள்ளது, சி-பில்லரில் டோர் ஹேண்டில்கள் மறைந்திருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ரூஃப் ரெயில்ஸ் மற்றும் டூயல் டோன் அலாய் வீல்ஸை கொண்டுள்ளது.

இந்த காரில் A மற்றும் C பில்லர்கள் செங்குத்தான கோணத்தை (steep angle) கொண்டுள்ளன. இது ஹூண்டாய் காஸ்பருக்கு ஒரு பாக்ஸி லுக்கை கொடுக்கின்றன. மேற்சொன்ன டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் இந்த காருக்கு ஒரு ஸ்போர்ட்டி லுக்கை தருகின்றன. இன்டீரியர் லுக் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளிவராவிட்டாலும் இந்த கார் ஃப்ளோட்டிங்க் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டமை (floating touchscreen infotainment system) பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கார் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தைப் பெறும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தவிர ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, மல்ட்டி இன்பர்மேஷன் டிஸ்பிளே ,கீலெஸ் என்ட்ரி ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் பல வசதிகள் இந்த காரில் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.

Also read... 3 முறை விலை உயர்த்திய பிறகும் ஆகஸ்ட் மாதத்தில் 1.3 லட்சம் வாகனங்களை விற்ற மாருதி சுசுகி!

சக்தி மற்றும் செயல்திறனை பார்க்கும் போது ஹூண்டாய் காஸ்பர் 85 பிஹெச்பியை உற்பத்தி செய்யும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எம்பிஐ எஞ்சின், 99 பிஎச்பி பவரை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் உள்ளிட்டவற்றுடன் வரலாம். மேலும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர காஸ்பரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹூண்டாய் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் தென்கொரியாவில் முதலில் அறிமுகமாகும் இந்த கார் அதனை தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இந்த எக்ஸ்ஷோரூம் விலை தோராயமாக ரூ.5 லட்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: