Home /News /automobile /

‘தீப்பிடிக்கும் அபாயம் இருக்கு’... 2 லட்சம் வாகனங்களை திரும்ப பெறும் கியா! 

‘தீப்பிடிக்கும் அபாயம் இருக்கு’... 2 லட்சம் வாகனங்களை திரும்ப பெறும் கியா! 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வாடிக்கையாளர்களிடம் இருந்து தீப்பிடிப்பதாக வந்த புகார்களை அடுத்து 2 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக ஹூண்டாய் கியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaCanadaCanada
    வாடிக்கையாளர்களிடம் இருந்து தீப்பிடிப்பதாக வந்த புகார்களை அடுத்து 2 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக ஹூண்டாய் கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனமும் அதன் துணை நிறுவனமான கியா நிறுவனமும் உலகம் முழுவதும் தங்கள் நிறுவன கார்களை விற்பனை செய்துவருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிகவும் சோதனையான காலக்கட்டமாக அமைந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹூண்டாய் மற்றும் கியா கார்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் எழுந்தது.

    இதனையடுத்து அமெரிக்காவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் விற்பனை செய்திருந்த ஹூண்டாய் சாண்டா ஃபே, ஹூண்டாய் டியூஷான், கியா கே900, கியா ஸ்போர்டேஜ் மாடல்களைச் சேர்ந்த 4 லட்சத்து 85 ஆயிரம் கார்கள் திரும்ப பெறப்பட்டன. ஆனால் பிரச்சனையை சரி செய்து கொடுக்காமல் மேம்போக்காக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மீண்டும் ஹூண்டாய் மற்றும் கியா கார்கள் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    Also Read : இந்தியாவில் களம் இறங்குகிறது மெக்லாரன்.. சூப்பர் கார்கள் வரிசையில் மற்றுமொரு சேர்க்கை!

    இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் 25 கார்கள் தீயால் உருகுலைந்து போன சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த விபத்தால் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தீப்பிடிக்கும் பிரச்சனையை சரி செய்வதற்காகவும் ஹூண்டாய் கியா நிறுவனம் 2,81,000 எஸ்யூவிக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி, 2020 முதல் 2022 வரையில் வெளியான 2 லட்சத்து 45 ஆயிரம் ஹூண்டாய் பாலிசேட் மற்றும் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கியா டெல்லூரைடு எஸ்யூவிக்களை திரும்பப் பெற உள்ளதாக ஹூண்டாய் கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், டவ் ஹிட்ச் வயரிங்கில் உள்ள சர்க்யூட் போர்டில் தூசு மற்றும் ஈரப்பதம் சேர்வதால், மின்கசிவு ஏற்பட்டு கார்கள் தீப்பிடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல எஸ்யூவி கார்கள் அடுத்தடுத்து தீப்பிடித்ததாக வந்த புகார்களை அடுத்து ஹூண்டாய் மற்றும் கியா உரிமையாளர்கள் தங்கள் பெரிய எஸ்யூவி வாகனங்களை கட்டிடத்திற்குள் நிறுத்த வேண்டாம் என்றும், திறந்த வெளியில் நிறுத்தும் படியும் வாகன உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Also Read : அசத்தலாக வெளிவர இருக்கிறது மாருதி ஆல்டோ 2022 - என்னென்ன சிறப்பம்சங்கள்.!

    ஹூண்டாய் மற்றும் கியா எஸ்யூவிக்கள் தீப்பிடிப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவது எப்படி என்பதற்கான வழியை நிறுவனங்கள் இதுவரை முழுமையாக கண்டறியவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது இடைக்கால தீர்வாக வயரிங் சரி பார்க்கப்பட்டு, சில பழுது நீக்கும் பணிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பழுது நீக்கம் செய்யப்படும் வரை ஹூண்டாய் மற்றும் கியா எஸ்யூவிக்களை விற்பனை செய்வதை நிறுத்தி டீலர்களும் நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்தடுத்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருவது ஹூண்டாய் மற்றும் கியா வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Fire accident, Hyundai, Kia motors

    அடுத்த செய்தி