• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Hyundai: சென்னையில் ஒரு கோடியாவது கார் தயாரிப்பு - ஹூண்டாய் நிறுவனம் சாதனை!

Hyundai: சென்னையில் ஒரு கோடியாவது கார் தயாரிப்பு - ஹூண்டாய் நிறுவனம் சாதனை!

ஹூண்டாய்

ஹூண்டாய்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனத்தின் பழைய மாடலான சான்ட்ரோ கார் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டது.

  • Share this:
தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு கோடியாவது காரை தயாரித்து ஹூண்டாய் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் கார் தயாரிப்பில் 2வது மிகப்பெரிய நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனம் உள்ளது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கார் தயாரிப்பு ஆலையை நிறுவிய அந்த நிறுவனம் அண்மையில், அந்த ஆலையில் இருந்து ஒரு கோடியாவது காரை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனத்தின் பழைய மாடலான சான்ட்ரோ கார் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மற்றும் திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ஹூண்டாய் நிறுவனதுக்கான நிலத்தை இருங்காட்டுக்கோட்டையில் ஒதுக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலையின் உற்பத்தியையும் அவர் தொடங்கி வைத்திருந்தார். சுமார் 25 ஆண்டுகள் மேலாக கார் உற்பத்தியில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ஹூண்டாய் நிறுவனம், அதே ஆலையில் ஒரு கோடியாவது காரை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. லேட்டஸ்ட் மாடலான அல்காசார் ஒரு கோடியாவது காராக தயாரிக்கப்பட்டது. அதனை திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதுகுறித்து பேசிய ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.கிம், சென்னை நிறுவனத்தில் ஒரு கோடியாவது கார் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது, ஹூண்டாய் நிறுவனத்திற்கான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

மேன் இன் இந்தியா திட்டத்தின் இலக்கை அடைவதில் ஹூண்டாய் நிறுவனம் கட்டுகோப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கார் உற்பத்தியில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சாதனைகள் படைத்திருப்பதாக கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரையில் மோட்டார் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் ஹூண்டாய் நிறுவனம் முன்னணியில் இருப்பதாக கூறிய எஸ்.எஸ்.கிம், 2020 தொடக்கம் வரை 3 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்திருப்பதாகவும் கூறினார். இதுவரை 88 நாட்களுக்கு கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருவதாகவும், பல்வேறு காலகட்டங்களில் அவற்றில் சாதனை படைதிருப்பதாகவும் கிம் குறிபிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ததாக கூறிய எஸ்.எஸ்.கிம், 2010 பிப்ரவரியில் 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ததாக தெரிவித்தார். மார்ச் 2014 ஆம் ஆண்டின்போது 20 லட்சம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.அடுத்தடுத்த ஆண்டுகளிலும் உற்பத்தியை பெருக்கிய ஹூண்டாய் நிறுவனம் மற்ற போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருந்துள்ளது.

Also read... Amazon: அமேசான் நிறுவனத்தின் ரோபோ டாக்சி - பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஹூண்டாய் செய்து வருகிறது. ட்ரீம் வில்லேஜ் புரொஜெக்ட் 2.0 - திட்டத்தின் கீழ் குழந்தைகள் நல மையத்தையும், 1,500 பேர் அமரக்கூடிய வகையில் சமுதாயக்கூடம் ஒன்றையும் காட்ரம்பாக்கம் கிராமத்தில் கட்டிக்கொடுத்துள்ளது. இதேபோல் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பண்ணை அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் ஹூண்டாய் நிறுவனம் அப்பகுதி மக்களுக்கு செய்து கொடுத்து வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: