Home /News /automobile /

புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் ஹைப்ரிட் வேரியன்ட்களை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்.. காரணம் என்ன.?

புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் ஹைப்ரிட் வேரியன்ட்களை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்.. காரணம் என்ன.?

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

Maruti Suzuki Grand Vitara | மிட்-சைஸ் SUV செக்மென்ட்டில் நுழையும் மாருதி சுசுகி, கிராண்ட் விட்டாரா SUV-க்கான புக்கிங்கை ஏற்கனவே ஓபன் செய்து உள்ளது. இந்த நிலையில், சுமார் 33,000 ஆரடர்களுக்கு மேல் இதுவரை பெறப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
விரைவில் அறிமுகமாக உள்ள மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது. இதன் மூலம் மிட்-சைஸ் SUV செக்மென்ட்டில் நுழையும் மாருதி சுசுகி, கிராண்ட் விட்டாரா SUV-க்கான புக்கிங்கை ஏற்கனவே ஓபன் செய்து உள்ளது. இந்த நிலையில், சுமார் 33,000 ஆரடர்களுக்கு மேல் இதுவரை பெறப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கிராண்ட் விட்டாராவின் மைல்ட்-ஹைப்ரிட் வேரியன்ட்களை விட ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்கள் அதிக ஆர்டர்களை பெற்றுள்ளன. வாடிகையாளர்கள் ஏன் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழுகிறது. இந்திய மார்க்கெட் முன்பை விட அதி அளவில் SUV-க்களை நோக்கி நகர்வது கிராண்ட் விட்டாரா நலன் வரவேற்பை பெற காரணமாக உள்ளது. தவிர மிட்-சைஸ் SUV-க்ககள் மீது இந்தியர்களின் ஈடுபாடு முன்பை விட அதிகரித்துள்ளதும் கிராண்ட் விட்டாராவுக்கு சாதகமாக உள்ளது.

நியூ மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மைலேஜ்...

இப்போது ஏன் மைல்ட்-ஹைப்ரிட்டை விட, ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கு வாடிகையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதற்கு வருவோம். ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்கள் ஹூண்டாய் க்ரெட்டாவின் அம்சங்கள் அடங்கி டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் ட்ரிம்களுக்கு சம விலையில் இருக்கும். மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்கள் 27.97 kmpl மைலேஜ் மற்றும் மிக குறைந்த ரன்னிங் காஸ்ட்டை (lower running cost) வழங்கும். எனவே இது நாட்டிலேயே மிகவும் எரிபொருள்-திறனுள்ள SUV ஆக கருதப்படுகிறது.



நியூ மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டைமென்ஷன்ஸ்..

கிராண்ட் விட்டாரா ஆர்டரை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம் இந்த SUV-யின் ஒட்டுமொத்த டைமென்ஷன்ஸ் ஆகும். நியூ கிராண்ட் விட்டாரா செக்மென்ட்-கிங் - ஹூண்டாய் க்ரெட்டா காரினுடைய டைமென்ஷன்ஸ்களின் அடிப்படையில் மிகவும் ஒத்ததாக இருக்கிறது. இந்த SUV 4,345 மிமீ நீளம், 1,795 மிமீ அகலம், 1,645 மிமீ உயரம் மற்றும் 2,600 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய கிராண்ட் விட்டாரா 1185-1210 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என மாருதி சுசுகி கூறுகிறது.

Also Read : மகிந்திரா டாட்டா ஓலா.. அடுத்தடுத்து அறிமுகமாகும் எலெக்டிரிக் கார்கள்..

எஞ்சின்..

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்கள் Atkinson cycle motor-ஐ பயன்படுத்தும். இது ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து 115 PS மற்றும் 122 Nm மொத்த ஆற்றலை உருவாக்கும். இந்த செட்டப் கிட்டத்தட்ட ஒரு டஜன்-ஆயிரம் கிலோமீட்டர் அளவிலான டேங்க்- ரேஞ்சை வழங்குவதாக கூறப்படுகிறது. கிராண்ட் விட்டாராவின் ஸ்ட்ராங்-ஹைபிரிட்டை வாடிகையாளர்கள் வாங்க நினைக்க இது மற்றொரு காரணம். மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா ஸ்ட்ராங்-ஹைப்ரிட்டை ஒரு கிலோமீட்டருக்கு இயக்க ரூ.3.60 செலவாகும் என்பதை சில எளிய கணக்கீடுகள் வெளிப்படுத்துகின்றன.

மேற்கண்ட இந்த அம்சங்கள் இந்த SUV-யின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியன்ட்டை வாடிகையாளர்கள் அதிகம் விரும்ப காரணமாக இருக்கின்றன.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Maruti Suzuki

அடுத்த செய்தி