மழைக்காலங்களில் பைக் ஓட்டுவது எப்படி: டிப்ஸ் & டிரிக்ஸ்

news18
Updated: September 1, 2018, 6:47 PM IST
மழைக்காலங்களில் பைக் ஓட்டுவது எப்படி: டிப்ஸ் & டிரிக்ஸ்
மழைக்காலங்களில் பைக் ஓட்ட டிப்ஸ், டிரிக்ஸ்.
news18
Updated: September 1, 2018, 6:47 PM IST
தமிழகத்தில் மழைக்காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. என்னதான் மழை நமக்கு குதூகலம் அளித்தாலும், ஓரிரு நாட்களில் தினசரி அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிலிப்பையும், சிரமத்தையும் ஏற்படுத்தும். அதுவும் குண்டும் குழியுமாக உள்ள நம் சாலைகளை கடந்து அலுவலகம் செல்வது என்பது ஒரு போர்க்களம்தான்.

மழைக்காலத்தில் விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்புகளும் அதிகம். ஆதலால் எதிர்வரும் மழைக்காலத்தை பைக் ஓட்டுபவர்கள் எப்படி சமாளிப்பது என்பதை இங்கே தொகுத்து வழங்குகிறது நியூஸ் 18.

டையர்களை பரிசோதியுங்கள்:


பைக் என்னதான் நல்ல கண்டிஷனில் இருந்தாலும். அதை ஓட்டுபவர் கண்டிஷன் சரியில்லை என்றால் ஆபத்துதான். உடல் முழுவதும் மூடக் கூடிய நல்ல ரெயின் கோட் ஒன்றை வாங்கி பைக்கிலேயே வைத்துக்கொள்வது நல்லது. நனைந்து கொண்டே வண்டி ஓட்டுவது என்பது மிக ஆபத்தானது. ஒரு கட்டத்தில் குளிரால் நடுக்கம் ஏற்பட்டு பேலன்ஸ் தவறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

முதல் மழைக்கு  ‘நோ' சொல்லுங்கள்:

சாலைகளில் இருக்கும் புழுதி, அழுக்கோடு ஆயிலும் கலந்திருப்பதால் மழை பெய்தவுடன் சாலை பல இடங்களில் வழுக்கும். மழை பெய்தவுடன் பைக்கை ஓரம் கட்டி மழைக்கு இதமாக சூடாக டீ குடித்து விட்டு செல்லுங்கள். மிக அவசரமான வேலை இல்லாத பட்சத்தில் மழையால் 20 நிமிடங்கள் தாமதமாக செல்வதில் தப்பில்லை.

Loading...

இந்த தடயங்கள் தெரிந்தால் ஜாக்கிரதை!

சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஆயில் கலவை இருக்க வாய்ப்புண்டு. இதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். தேங்கி நிற்கும் தண்ணீரில் வானவில் கலரில் ரிஃப்லெக்‌ஷன் தெரிகிறதோ, அங்கே பைக்கை செலுத்தாமல் இருப்பது நல்லது.

மிக அருகில் சென்றுதான் பள்ளத்தையோ, தண்ணீர் தேங்கியிருப்பதையோ பார்த்தீர்கள் என்றால் பதற்றம் அடைய வேண்டாம். சடன் பிரேக் என்பதும் ஆபத்தில் முடியும். ஆக்ஸிலேட்டரை உடனே குறைத்து வண்டியை நிதானமாக ஸ்டெடியாக அந்த பள்ளத்தில் செலுத்துங்கள். எப்போதும், சாலைகளில் எங்கெங்கு பள்ளங்கள் உள்ளன என்று கண்காணித்து கவனமாக ஓட்டுங்கள்.

வேண்டாம் வேகம்:

வேகம் கூடவேக்கூடாது. மழைக் காலங்களில் இதை ஒரு விதியாகவே பின்பற்றுங்கள். அதேபோல் முன் செல்லும் வாகனத்துக்கும் உங்களுக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்கும்படி ஓட்டவேண்டும். லாரி போன்ற பெரிய வாகனங்களை பெரும் மழையின்போது ஒவர்டேக் செய்யாதீர்கள். அதன் டையர்களிலிருந்து தெளிக்கும் தண்ணீர் நம் பார்வையை மங்கலாக்கும். இண்டிக்கேட்டர்களை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். பழுதாகி இருந்தால், ஹெட் லைட், இண்டிக்கேட்டர்கள் போன்றவற்றை சரி செய்து வைத்துக்கொள்வது நல்லது.

 
First published: September 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...