நல்ல சொகுசான காரில் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் பயணிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதுவும், ஊர் உறங்கிய இரவுப் பொழுதில், குளு, குளு ஏசி வசதியுடன், மனதுக்கு பிடித்த ரம்மியமான பாடல்களை கேட்டுக் கொண்டே சென்றால் அந்த பயணம் களைப்பு எதுவுமின்றி சுகமாக நிறைவுபெறும்.
ஆனால், பெரும்பாலான கார்களில் நல்ல தரமான மியூசிக் சிஸ்டம் இருப்பதில்லை. மார்க்கெட்டில் சூப்பரான மியூசிக் சிஸ்டம் கிடைக்கும் என்றாலும் கூட, பலரும் அதை வாங்கி காரில் மாற்றுவதற்கு விரும்புவதில்லை. இதனால், நல்ல மியூசிக் சிஸ்டம் மூலமாக பாட்டு கேட்க முடியாதோ என்ற கவலையே உங்களுக்கு தேவையில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் கார் பிளே இந்த வசதியை உங்களுக்கு வழங்குகிறது. குறிப்பிட்ட சில வகை கார்களில் மட்டுமே கார் பிளே வசதி இருக்கிறது என்றாலும் கூட, உங்கள் ஐபோனை அதனுடன் இணைக்க இது சிறந்த மற்றும் பாதுகாப்பான வழிமுறையாக உள்ளது.
எப்படி ப்ளே செய்வது?
உங்கள் காரில் கார் ப்ளே வசதி இருந்து, உங்களிடம் ஒரு ஐபோனும் இருந்தால் தற்போது அதனை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
* உங்கள் காரை ஸ்டார்ட் செய்யுங்கள். ஆப்பிள் போனில் சிரி என்ற மெனு ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள்.
* உங்கள் ஐபோன் டிவைசையும், காரில் உள்ள கார் பிளே டிவைசையும் யுஎஸ்பி கேபிள் மூலமாக இணைக்கவும்.
* ஒருவேளை வயர்லெஸ் மூலமாக கனெக்ட் செய்து கொள்ளும் வசதி உங்கள் காரில் இருந்தால் உங்களுக்கான மெனுவை அது ஸ்கிரீனில் காட்டும்.
* ஒருவேளை வயர்லெஸ் மூலமாக மட்டுமே செய்ய முடியும் என்றால், ஸ்டியரிங்கில் உள்ள வாய்ஸ் கமெண்ட் பட்டனை அழுத்திப் பிடித்து, அதற்கு பிறகு ப்ளூடூத் வசதியை ஆன் செய்யவும்.
* பிறகு உங்கள் போனில் செட்டிங்ஸ் > ஜெனரல் > கார் பிளே என சென்று, பின்னர் உங்கள் கார் எது என்று தேர்வு செய்யவும்.
* இப்போது உங்கள் போனில் இருந்து கார் பிளே மூலமாக மனதிற்கு பிடித்த இசையை ரசித்தபடி உங்கள் பயணத்தை இனிமையாக மேற்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் : புதிய டாடா ஸஃபாரி பெட்ரோல் மாடலின் ரகசிய டெஸ்ட் டிரைவ் – எப்போது அறிமுகம் தெரியுமா?
பெரும்பாலும் கார் பிளே வசதியை வயர்லெஸ் மூலமாக பயன்படுத்திக் கொள்வது மிக சிறந்த விருப்பம் ஆகும். பெரும்பாலான மக்கள் யுஎஸ்பி கேபிள்களை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழலில் ஒயர்லெஸ் மூலமாக கார் பிளே இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிதாகவும், வசதி மிகுந்ததாகவும் இருக்கும். மேலும், ஒரு காரில் இருந்து மற்றொரு காரில் உள்ள கார் பிளே டிவைசுக்கு இந்த வசதியை நீங்கள் எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.