வாகனங்கள் இன்சூரன்ஸ் என்பது மோதல், விபத்து, மரணம் அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவாக கார் அல்லது பைக்கிற்கு ஏற்படும் சேதத்திற்கான தொகையை பெற வழிவகுக்கிறது. இதற்காக குறிப்பிட்ட தொகையை வாகன உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி ஆண்டுதோறும் நாம் செலுத்தும் இன்சூரன்ஸ் தொகையால் நமக்கு ஏதாவது பலனுள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அனைவரது கடமை.
வாடிக்கையாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் இரண்டும் பயனடையும் வகையில் Pay-as-you-drive என்ற காப்பீட்டுத் திட்டத்திற்கு இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் மூலம் கிடைக்க கூடிய பலன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்...
1. காப்பீட்டுத் திட்டம்:
வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பிரீயம் என்பது அதன் மைலேஜ் மற்றும் வாகனத்தின் தரத்தை பொறுத்தது. இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, (Irdai) இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காரின் பயன்பாட்டின் அடிப்படையில் பிரீமியத்தை வசூலிக்கும் ஒரு வகையான விரிவான கார் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது. Pay as you drive என்ற காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்த கிலோமீட்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கார் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் பிரீமியம் தொகையை செலுத்தலாம்.
ALSO READ | கொலம்பியாவில் 5G iPhone மற்றும் iPadகளை விற்க மற்றும் இறக்குமதி செய்ய தடை - ஏன் தெரியுமா.?
இந்தத் திட்டம் வாங்குவோர் தங்கள் கார்களுக்கான மைலேஜ் வரம்பை நிர்ணயிக்கவும், சாதாரண பிரீமியத்தை விட தள்ளுபடியை வழங்கவும் அனுமதிக்கிறது. மேலும் இதில் இன்சூரன்ஸ் செலுத்துபவர் தேர்ந்தெடுக்கும் வரம்பு வரை மட்டுமே காப்பீடு செல்லுபடியாகும். இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 7,500 கிமீ, 5,000 கிமீ மற்றும் 2,500 கிமீ என மூன்று அடுக்குகளை வழங்குகிறது. குறைந்த வாகன உபயோகம் உள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை கவனித்து, போக்குவரத்து விதிகளை பின்பற்றி பயனடையலாம்.
2. ஃப்ளோட்டர் கவர்:
ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசிகளைப் போலவே, இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் வாகனங்களுக்கான ஃப்ளோட்டர் கவரேஜ்கள் உள்ளன. இதில் வாகன உரிமையாளர்கள் ஒரே பாலிசியின் கீழ் பல வாகனங்களை இணைக்கலாம். உடல்நலக் காப்பீட்டில், ஃப்ளோட்டர் பாலிசிகள் மிகவும் பிரபலமாக உள்ளன, இதில் ஒரு பாலிசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்களின் பெயர்களை இணைத்துக் கொள்ளலாம். அதேபோல் வாகன இன்சூரன்ஸில் ஃப்ளோட்டர் கவரேஜ் என்பது ஒரே குடும்பத்திற்கு சொந்தமான வெவ்வேறு வாகனங்கள், வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஒரே இன்சூரன்ஸின் கீழ் கொண்டு வருவதாகும்.
3. வாகனம் ஓட்டுவதன் தரம்:
வாகனம் ஓட்டும் தரத்தின் அடிப்படையில் சலுகைகளை வழங்க காப்பீட்டு நிறுவனங்களை Irdai அனுமதித்துள்ளது. வாகனத்தின் நிலை மற்றும் பயனரின் ஓட்டும் பழக்கத்தை கண்காணிக்க டெலிமாடிக்ஸ் சாதனம் காரில் பொருத்தப்பட்டுள்ளது. கவனமாக இயக்குபவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்க தரவு விளக்கப்படுகிறது. இந்த கருவியை பொருத்திய பிறகு அவசரம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ALSO READ | அதிகரித்து வரும் சைபர் தாக்குதலும், புதிய VPN விதிகளும் - யூசர்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்குமா.?
4. வரையறுக்கப்பட்ட நன்மைகள்:
சில வாகன இன்சூரன்ஸ் பாலிசிகளின் கொள்களை நன்றாக உற்றுநோக்கினால் அவை வரையறுக்கப்பட்ட பலன்களை மட்டுமே கொண்டுள்ளதை கண்டறியலாம். உதாரணமாக, நீங்கள் 7,500 கிலோ மீட்டர் ஸ்லாப்பைத் தேர்வு செய்தால், வழக்கமான பிரீமியத்தில் 10% தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். உங்கள் சொந்த சேத பிரீமியத்திற்கு (own damage premium) மட்டுமே தள்ளுபடி பொருந்தும், மேலும் கட்டாய மூன்றாம் தரப்பு பிரீமியம் (third-party premium) மற்றும் பிற ஆட்-ஆன் அம்சங்களை பாதிக்காது. இதுவே குறைந்த வரம்பான 2,500 கிலோ மீட்டருக்கான ஸ்லாப்பை நீங்கள் தேர்வு செய்தால், மேலும் பல கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் கிடைக்கும். ஆனால் இத்திட்டத்தில் தினந்தோறும் 7 கிலோ மீட்டருக்கும் குறைவாக பயணிக்கும் வாகனத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் செய்ய முடியும்.
5. வரம்பை மீறினால் தப்பில்லை:
நீங்கள் வாங்கியுள்ள இன்சூரன்ஸ் பாலிசி ஸ்லாப் வரம்பை விட அதிகமாக வாகனத்தை ஓட்டினால் எவ்வித பிரச்சனையும் கிடையாது. உங்கள் பாலிசியை வரம்பற்ற அல்லது அதிக ஸ்லாப் கொண்ட பாலிசிக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த வரம்பை நீங்கள் மீறும் முன்பு வாகனத்தை இயக்குவதில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். விபத்து அல்லது க்ளைம் செய்யப்பட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் பாலிசி வரம்பை மாற்ற இயலாது.
6. பிரைவசி பாதிப்பு:
டெலிமாடிக்ஸ் சாதனங்களை நிறுவுவது மற்றொரு சிக்கலான பிரச்சனையாகும், ஏனெனில் இது கார் உரிமையாளருக்கு அவர்களது பிரைவசி குறித்த கவலையை உருவாக்குகிறது. மேலும் இது இன்சூரன்ஸுக்கான பிரிமீயத்தை குறைக்கும் என்றாலும், கருவியை பொறுத்துவதற்கான செலவு பாலிசிதாரர்கள் தலையில் விழுகிறது. மேலும் உங்கள் காரின் இயக்கம் பற்றிய 24X7 தரவுகள் அனைத்தும் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருக்கும் என்பதில் எவ்வித தயக்கமும் இல்லை என்றால் மட்டுமே நீங்கள் pay-as-you-drive பாலிசியை தேர்வு செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.