Home /News /automobile /

பொதுப்போக்குவரத்துக்கு Good Bye சொல்லுங்க - ஐரோப்பிய நாடுகள் பாணியில் Yulu நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் புரட்சி

பொதுப்போக்குவரத்துக்கு Good Bye சொல்லுங்க - ஐரோப்பிய நாடுகள் பாணியில் Yulu நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் புரட்சி

Yulu e bikes

Yulu e bikes

வாடிக்கையாளர்கள் எளிமையாக அணுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதால் யுலு நிறுவனத்தின் இ- ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஐரோப்பிய நாடுகளில் பயணித்த அனுபவம் இருந்தால், பொதுப் போக்குவரத்துக்கு மாற்றாக எலக்ரிடிக் பை சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் பயணிப்பவர்களை பார்த்திருக்க வாய்ப்புகள் உள்ளது. நகரப்பகுதிகளில் இருக்கும் எலக்டிரிக் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை செல்போன் செயலி மூலம் அன்லாக் செய்து, அதற்கான வாடகை கட்டணத்தை செலுத்தி நீங்கள் விரும்பும் இடத்துக்கு எடுத்துச் செல்லலாம். வாகனத்தின் தேவை இல்லை என்றால், நீங்கள் பயணித்த இடத்திலேயே நிறுத்திவிடலாம்.

இதேபோன்றதொரு கான்செப்டுடன் பெங்களுரு, டெல்லி ஆகிய நகரங்களில் Yulu நிறுவனம் எலக்டிரிக் ஸ்கூட்டர்களை இயக்கி வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், மிகக் குறைந்த கட்டணத்தில் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாத வகையில் இந்த ஸ்டார்ட்அப்-ஐ பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்டு அந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. யுலு நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் குறித்து, கம்பெனியின் நிறுவனர் அமித் குப்தா தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

யுலு (Yulu) பிராண்டு & செயல்பாடு குறித்து?

இந்தியாவில் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது. இதனால், காற்று மாசு ஏற்படுவதுடன், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மக்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. இதனை குறைக்கும் விதமாகவும், நகர்புற போக்குவரத்தை தடையற்றதாக, பகிரக்கூடியதாக மற்றும் நிலையானதாக மாற்றுவதே யுலு நிறுவனத்தின் இலக்கு.

2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களையும், 3 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களையும் கொண்டுள்ளது. தற்போது டெல்லி, பெங்களுரு, மும்பை, புனேவில் யுலு நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Also Read:   டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

யுலு நிறுவனத்தின் வாகனத்தின் இயக்கம் குறித்து விளக்க முடியுமா?

நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மக்கள் புகையை உமிழும் வண்டிகளில் இருந்து மின்சார வாகனங்களை நோக்கி திரும்புகின்றனர். தொலைதூர பகுதிகளுக்கு செல்ல கார்களை விடவும்  ஸ்கூட்டர் பயன்படுகின்றன. யுலு நிறுவனத்தின் வாகனங்கள் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் டிராக்கர், சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வாகனம் செல்லும் இடம், திருட்டு ஆகியவை குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். ஸ்கூட்டரின் மெயின்டெனன்ஸ் தொடர்பான தகவல்களும் டிஜிட்டலில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தரமான டயர் பொருத்தப்பட்டிருப்பதால் பஞ்சராக வாய்ப்பில்லை.

Yulu e bikes


வாகனத்தின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்கிறீர்கள்?

வாகனம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாகனங்களை கண்காணிக்க ஸ்பெஷல் டெக்னீசியன்கள் இருப்பதால், 99.4% விழுக்காடு வாகனங்கள் திருடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அன்றாடம் வாகனங்கள் நிலை குறித்து செக் செய்யப்படுகிறது. ஏதேனும், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக சரிசெய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையும் அன்றாடம் கண்காணிகப்படுகிறது. அதற்கேற்ப நிறுவனத்தின் சார்பில் அப்டேட்களும் செய்து கொடுக்கப்படுகின்றன.

யுலு நிறுவனத்தின் மார்க்கெட் நிலவரம் என்ன?

இன்டர்நெட் மற்றும் டெக்னாலஜி பயன்பாடு அதிகரிப்பதால், யுலு நிறுவனமும் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. இ-ஸ்கூட்டர்களை வழங்குவதில் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாகவும் யுலு வளர்ந்து இருக்கிறது. நகரப் பகுதிகளில் இருக்கும் டெக் பார்க்குகளில் இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்து, அங்கு தேவைப்படும் வசதிகளை செய்து கொடுத்து மார்க்கெட் மற்றும் பயன்பாடுகளை ஊக்குவித்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் எளிமையாக அணுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதால் யுலு நிறுவனத்தின் இ- ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யுலு நிறுவனத்தின் இலக்கு என்ன?

கார்ப்பரேட்டுகளுடன் மட்டுமல்லாது பெங்களுரு, புனே நகரங்களில் அரசின் முனிசிபல் கார்ப்பரேஷனுடன் கரம்கோர்த்து யுலு இ-ஸ்கூட்டர் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுக்குள் சுமார் 2 லட்சம் எலக்டிரிக் ஸ்கூட்டர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதே முதன்மையான இலக்கு என யுலு நிறுவனர் கூறியுள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Automobile, Electric bike

அடுத்த செய்தி