மந்தநிலையில் ஆட்டோ மொபைல் துறை: மூடும் நிலையில் சிறு குறு நிறுவனங்கள்

மந்தநிலையில் ஆட்டோ மொபைல் துறை: மூடும் நிலையில் சிறு குறு நிறுவனங்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2019, 11:09 PM IST
  • Share this:
ஒசூரில் செயல்படும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறுத்தொழில் நிறுவனங்கள் 80 சதவீதம் உற்பத்தியை நிறுத்தி கொண்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஒசூர் கனிமவளம் நிறைந்த பகுதி. இங்கு குண்டு ஊசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை அனைத்து வகையிலான தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அசோக் லைலேண்ட், டிவிஎஸ் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியை குறைந்துள்ளன. இது, ஒசூரில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போதுள்ள வாகனங்களை BS4 லிருந்து BS6 ஆக மாற்றுவதாலும், இந்திய அரசு மின்சார வாகனங்களின் மீது அதிக கவனம் செலுத்துவதால் கடந்த 6 மாதங்களாக தங்கள் நிறுவனங்களின் உற்பத்தி குறைந்துள்ளதாக சிறுகுறு தொழில் முனைவோர் கூறுகின்றனர். லேபர் சார்ஜ் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான விற்பனை வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது போன்றவையே குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை பாதித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக ஒரு நாளைக்கு 3 ஷிப்ட், ஓவர் டைம், ஞாயிற்று கிழமைகளிலும் பணி என்று விறுவிறுப்பாக உற்பத்தி நடைபெற்று வந்த சிறு குறு நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அலுவலகர்களுக்கும் மேலாக ஊதியம் பெற்று வந்த தாங்கள், சாப்பிடுவதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு பணியாற்றும் கூலி தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, ஜிஎஸ்டி வரியை குறைத்து ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறுகுறு தொழில் முனைவேரின் வேண்டுகோள்.
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading