ஒரு சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மக்களிடையே எப்பொழுதும் மிகப் பெரிய அளவு வரவேற்பு இருக்கும். சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிராண்டின் தயாரிப்பு அறிமுகம் ஆகிறது என்றால் வரிசை கட்டிக் கொண்டு அதை வாங்குவதற்குத் தயாராக இருப்பார்கள். அதில் ஆட்டோமொபைல் பிரியர்கள் விதிவிலக்கல்ல. தாங்கள் விரும்பும் நிறுவனத்தின் புதிய மாடல் பைக் அல்லது கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் எத்தனை மாதங்களுக்கு முன்பு தேவைப்பட்டாலும், அதற்கான முன்பதிவு செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்தவரிசையில் hop oxo நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் இணைத்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கிறகு இவ்வளவு டிமாண்ட் இருப்பதை எதிர்பாராத நிறுவனம் தற்காலிகமாக பைக்கின் முன்பதிவை நிறுத்தியுள்ளது.Hop Oxo நிறுவனம் இந்த ஆண்டு குறைந்த பட்சம் 50,000 பைக்குகள் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியது.
இந்தியச் சந்தையில் எலெக்ட்ரிக் பைக்குக்களுக்கு தற்போது அதிக டிமாண்ட் இருந்து வரும் நிலையில், இந்தியச் சாலைகளில் ஓட்டுவதற்கு பைக்குக்கள் பொருத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் தரச் சான்றிதழும் பல்வேறு கட்டத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், Hop Oxo எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த ஃபிளாக்ஷிப் மாடல், இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் 1,00,000 கிலோமீட்டருக்கு மேல் சோதனை ஓட்டம் நடத்தி இருப்பதாகக் கூறுகிறது.
ARAI சோதனைகள் மற்றும் 1,00,000 கிலோமீட்டர் சாலை சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை இந்த மாடல் நிறைவேற்றி உள்ளதால் விரைவிலேயே இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று Hop நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதைத் தொடர்ந்து முன்பதிவு தொடங்கியது.
முன்பதிவு அறிவிக்கப்பட்ட உடனேயே நிறுவனம் 5000 முன்பதிவைப்பெற்றது. நிறுவனத்தின் முதன்மை மார்கெட்டிங் அதிகாரியான ரஜ்னீஷ் சிங் இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் பற்றிக் கூறுகையில் ‘இன்னும் சில நாட்களிலேயே ஷோரூம்களில் விநியோகம் செய்யப்படும்’ என்று தெரிவித்தார். தற்பொழுது டீலர் பார்ட்னர்களிடமிருந்து புக்கிங் பெற்றிருப்பதாகவும், அந்த டிமாண்ட் அதிகமாக இருப்பதால் முன்பதிவைத் தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நேரடியாக ரீடெயில் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Also Read:XUV 700 காரை வாங்க 1.5 லட்சம் பேர் முன்பதிவு - தட்டி தூக்கிய மஹிந்திரா
பல வாகனங்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி அதற்குரிய சோதனைகளை மேற்கொண்டு வந்தாலும், உற்பத்தி-சப்ளை செயின் ஆகியவற்றில் எப்பொழுதுமே ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து வந்துள்ளது. Hop oxo விநியோகம் மற்றும் சப்ளை செயினில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நிறுவனம் ஏற்கனவே உற்பத்தியைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் சப்ளை செயின் மற்றும் டெலிவரிஅனைத்துமே சீராகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த 12 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 50,000 எலெக்ட்ரிக் பைக்குக்கள் விற்பதற்கு நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் Hop மொபிலிட்டி நிறுவனத்தின் 60 புதிய டீலர்ஷிப்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஹாஃப் நிறுவனம் புதிதாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவும் தயாராகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Launch