• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விரைவில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய சப்-காம்பாக்ட் SUV கார்- சிறப்பம்சங்கள்!

விரைவில் அறிமுகமாகிறது ஹோண்டாவின் புதிய சப்-காம்பாக்ட் SUV கார்- சிறப்பம்சங்கள்!

WR-V-க்கு மாற்று மாடலாக கருதப்படும் புதிய ஹோண்டா எஸ்யூவி கார் பிறவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • Share this:
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா சமீபத்தில் அதன் 2 புதிய தலைமுறை தயாரிப்புகளான 11-வது தலைமுறை ஹோண்டா சிவிக் ஆர்எஸ் (11th generation Honda Civic RS) மற்றும் ஆல் நியூ ஹோண்டா சிட்டியையும் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வில் முற்றிலும் புதிய காரின் டீஸர் வீடியோவையும் ஹோண்டா வெளியிட்டது. இந்த புதிய கார் டீஸர் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், முதற்கட்ட அறிக்கைகளின்படி ஹோண்டாவின் புதிய கார் ZR-V என்ற சப்காம்பாக்ட் SUV-ஆக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நவம்பர் 11 - 21 வரை நடைபெறும் GAIKINDO இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோவில் (GIIAS) இந்த காரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. WR-V-க்கு மாற்று மாடலாக கருதப்படும் இந்த புதிய ஹோண்டா எஸ்யூவி, சப்-காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் பிரெஸ்ஸா (Brezza), வென்யூ, நெக்ஸான் மற்றும் பிறவற்றுக்கு இந்தியாவில் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ZR-V தெற்காசிய சந்தைகளுக்கான சப்-காம்பாக்ட் SUV ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் இதுவும் ஒன்று என்பதால், SUV களில் மீண்டும் கவனம் செலுத்த ஹோண்டா ஆர்வமாக உள்ளது.

Must Read | இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் ZR-V ஆனது ஹோண்டா அமேஸின் அதே எஞ்சின் யூனிட்டைப் பயன்படுத்தும் என்றும், 2022-ஆம் ஆண்டின் மத்தியில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அறிக்கைகளின் படி புதிய ஹோண்டா ZR-V ஸ்போர்ட்டி ஃப்ரன்ட் கிரில், ட்ரெண்டி ஹெட்லேம்ப்ஸ், ஸ்லீக் எல்இடி டிஆர்எல்-களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் ஃபீலை மேம்படுத்தும் வகையில் இதன் டிசைன் இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பிட்ட டீஸரில் காரின் வொயிட் வேரியன்ட் இடம் பெற்றிருந்தது, இதன் ரூஃப், விண்ட் மிரர்ஸ், ரூஃப் டெயில்ஸ் மற்றும் பி-பில்லர்கள் கருப்பு நிற ஃபினிஷிங்கில் காணப்பட்டது.

இதனிடையே ஹோண்டா பிரதிநிதி ஒருவர் பேசுகையில், நாங்கள் விரைவில் ஒரு உலக பிரீமியர் தயாரிப்பை வழங்க உள்ளோம். எனவே GIIAS 2021-ல் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்த மிகவும் ஆவலாக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள சப்காம்பாக்ட் செக்மென்ட்டில் ZR-V ஐ அறிமுகப்படுத்துவதை ஹோண்டா நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இது 4 மீட்டர் நீளம், 1,695 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நாம் முன்பே குறிப்பிட்டது போல், அமேஸில் நாம் பார்த்த அதே 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் யூனிட்டை இந்த எஸ்யூவி கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 PS பவரையும், 110 Nm பீக் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்க கூடும். இந்த இன்ஜினில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் இடம்பெறும் என்றும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: