விரைவில் அறிமுகமாகிறது ஹோன்டாவின் ஹைபிரிட் ஸ்கூட்டர்

விரைவில் அறிமுகமாகிறது ஹோன்டாவின் ஹைபிரிட் ஸ்கூட்டர்
ஹோன்டா பிசிஎக்ஸ் ஹைபிரிட்
  • News18
  • Last Updated: July 17, 2018, 8:10 AM IST
  • Share this:
ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக தேதியையும் ஹோன்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹோன்டா பிசிஎக்ஸ் 125 என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்கூட்டரில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கும் ஹோன்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன்படி, ஹோன்டா நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பிசிஎக்ஸ் ஹைபிரிட் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. 125சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜினும் எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. 48 வோல்ட் திறனுள்ள லித்தியம் பேட்டரியிலிருந்து திறன் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஹைபிரிட் ஸ்கூட்டரின் எடை 50 கிலோகிராம். ஏற்கெனவே உள்ள பிசிஎக்ஸ் 125 ஸ்கூட்டரை விட புதிய ஸ்கூட்டரின் எடை அதிகமாகும். ஜப்பானில் இதன் விலை 4,32,000 யென் (இந்திய மதிப்பில் ரூ.2.67 லட்சமாகும்) ஆகும். இந்த ஆண்டில் 2,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய ஹோன்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...