ஒற்றை சீட்டுடன் கச்சிதமான வடிவில் அறிமுகமான Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

honda U BE

ஹோண்டா U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். அதிக ரேஞ்ச் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதில் பின் சீட்டை கழட்டிவிட்டிருக்கின்றனர். மற்றபடி இது ரெகுலரான ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவே காட்சி தருகிறது.

  • Share this:
ஒற்றை சீட்டுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான U-BE என்ற மாடலை Honda நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை தற்போது தெரிந்து கொள்வோம்.

இந்திய சாலைகளை இனி எலக்ட்ரிக் வாகனங்களே ஆளப் போகின்றன. அதற்கேற்றவாறே முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் போட்டி போட்டுக்கொண்டு இறங்கி வருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏதெர் தனது 450X ஸ்கூட்டர்களை களமிறக்கி வெற்றி கண்ட நிலையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் S1, S1 Pro என இரண்டு மாடல்களை ஆகஸ்ட் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Also Read: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் – முழு விவரம்!

இந்நிலையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா U-GO மற்றும் ஒற்றை சீட்டுடன் கூடிய U-BE என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. Wuyang Honda என்ற ஹோண்டாவின் சீன பிரிவின் மூலம் இந்த பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் Wuyang Honda நிறுவனம் ஹோண்டாவின் மற்றுமொரு அங்கமாகும்.

இந்த இரு ஸ்கூட்டர்களில் U-BE மாடல் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். அதிக ரேஞ்ச் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதில் பின் சீட்டை கழட்டிவிட்டிருக்கின்றனர். மற்றபடி இது ரெகுலரான ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவே காட்சி தருகிறது.

Also Read:  கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் ஆப்கனை விட்டு தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனி – புதிய தகவல்கள்

இதில் முன்பக்கத்தில் அகலமான இடவசதி கிடைக்கிறது. இதன் மூலம் அங்கு தேவையான லக்கேஜ் அளவு நமக்கு கிடைக்கிறது. stylish digital instrument console, anti-theft key lock, USB port போன்ற அம்சங்கள் உள்ளன.

இதில் 3 விதமான பேட்டரி பேக்குகள் கிடைக்கின்றன. இதைப் பொறுத்து இந்த பைக்கினுடைய செல்லும் தூரமானது 50கிமீ, 70 கிமீ மற்றும் 85 கிமீ ஆக உள்ளது. இந்த பைக்கின் மொத்த எடையே 54 கிலோ தான், ஆனால் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக உள்ளது. முழுக்க முழுக்க நகர்ப்புற வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டிருக்கிறது.

U-BE மாடலை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது தெளிவாக கூறப்படவில்லை. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு 91000 ரூபாயாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில் மற்றொரு மாடலான U-Go என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேசஞ்சர் சீட்டுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த பைக்கின் ரேஞ்ச் 133 கிமீ ஆக உள்ளது.
Published by:Arun
First published: