Home /News /automobile /

இந்தியாவில் வாகன விற்பனையை அதிகரிக்க ரூ.260 கோடியை முதலீடு செய்ய உள்ள ஹோண்டா நிறுவனம்.!

இந்தியாவில் வாகன விற்பனையை அதிகரிக்க ரூ.260 கோடியை முதலீடு செய்ய உள்ள ஹோண்டா நிறுவனம்.!

Honda

Honda

Honda | ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தங்கள் வாகனங்களுக்கான டீலர் பார்ட்னர்களை அதிகரிப்பதன் மூலமாக விற்பனையை துரிதப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பயணங்களுக்கான தேவைகள் இருக்கும் வரையில் ஆட்டோமொபைல் துறைக்கு என்றுமே அழிவு கிடையாது. ஆனால், கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று கால சந்தை முடக்கம் காரணமாக வாகன விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் ஆட்டோமொபைல் துறை அந்த முடக்கத்தில் இருந்து மீண்டு, தற்போது அதிவேகமெடுத்து பயணித்து வருகிறது. குறிப்பாக, மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் காருக்கு கடந்த ஜூலை மாத இறுதியில் நடைபெற்ற புக்கிங் நடவடிக்கைகளே இதற்கு சான்றாகும். ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் கார்களுக்கான புக்கிங் நிறைவடைந்தது. ஆக, ஆட்டோமொபைல் மார்க்கெட் வேகமெடுத்து வரும் நிலையில், பிற நிறுவனங்களும் அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ரூ.260 கோடி முதலீடு செய்யும் ஹோண்டா நிறுவனம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் தங்கள் வாகனங்களுக்கான டீலர் பார்ட்னர்களை அதிகரிப்பதன் மூலமாக விற்பனையை துரிதப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனால், நாடு முழுவதிலும் டீலர் பார்ட்னர்கள் அமைக்க ரூ.260 கோடி முதலீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.



கொரோனா காரணமாக கால தாமதம்

டீலர்ஷிப் அதிகரிக்கும் நடவடிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டிலேயே செயல்படுத்துவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று கால முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்த அந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது என்று ஹோண்டா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Also Read : நீர் சூழ்நத பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது இந்த 5 விஷயங்களை மறக்க வேண்டாம்..!

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இலக்கு

இந்தியா முழுவதிலும் டீலர்ஷிப்களை அதிகரிப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என்று ஹோண்டா நிறுவனம் நினைக்கிறது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு துணைத் தலைவர் குணால் பெஹல் கூறுகைய்யில், “கொரோனா காலத்தை ஒப்பிடுகையில் தற்போதைய சூழல் மிக சிறப்பாக உள்ளது.



இந்நிலையில், ஹோண்டா நிறுவனம் தங்களது விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் டீலர்ஷிப் பார்ட்னர்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், இன்னமும் சில சவால்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் அடுத்த ஆண்டுக்குள் ஷோரூம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ள ரூ.260 கோடியில் ஏற்கனவே ரூ.100 செலவிடப்பட்டு ஷோரூம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

புதிய கார்கள் அடுத்த ஆண்டு விற்பனை

தற்போது செடான் வகை கார்களான சிட்டி, சிட்டி இஹெச்இவி மற்றும் அமேஸ் போன்ற கார்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்து வரும் ஹோண்டா நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக மாருதி நிறுவனத்தின் மாருதி சுஸுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிய கார்களை களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Honda, India

அடுத்த செய்தி