பிப்ரவரி முதல் அதிகரிக்கும் ஹோண்டா கார்களின் விலை... இந்த மாதமே வாங்கி விடுங்கள்!

முன்னதாக மாருதி சுசூகி நிறுவனம் குறிப்பிட்ட மாடல்களுக்கான விலையை ரூ.10,000 வரை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

news18
Updated: January 19, 2019, 5:44 PM IST
பிப்ரவரி முதல் அதிகரிக்கும் ஹோண்டா கார்களின் விலை... இந்த மாதமே வாங்கி விடுங்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: January 19, 2019, 5:44 PM IST
ஹோண்டா கம்பெனியின் premium SUV CR-V காரின் விலை விரைவில் தற்போதைய விலையிலிருந்து ரூ. 10,000 வரை அதிகரிக்கும் என்றும் மற்ற வகை கார்களின் விலை ரூ.7000 வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் கார்களின் விலை வரும் பிப்ரவரி மாதம் முதல் உயரவுள்ளது. கார் பாகங்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.கார் பாகங்களின் விலை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்கள் காரணமாக செலவினங்கள் மீது பெரும் அழுத்தம் வந்துள்ளதுள்ளதால் பிப்ரவரி 1, 2019 முதல் ஹோண்டா கம்பெனியின் premium SUV CR-V காரின் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கும் என்றும் மற்ற வகை கார்களின் விலை ரூ.7000 வரை அதிகரிக்கும் என்று ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ராஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.முன்னதாக மாருதி சுசூகி நிறுவனம் குறிப்பிட்ட மாடல்களுக்கான விலையை ரூ.10,000 வரை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதேபோல் டொயோட்டா, இசுசூ உள்ளிட்ட கம்பெனிகளும் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

Also watch

First published: January 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...