ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Splendor-க்கு போட்டியாக களமிறங்கும் ஹோண்டா.. மார்ச் மாதத்தில் புதிய அறிமுகம்..!

Splendor-க்கு போட்டியாக களமிறங்கும் ஹோண்டா.. மார்ச் மாதத்தில் புதிய அறிமுகம்..!

ஹோண்டா

ஹோண்டா

தனது பழைய நண்பனான ஹீரோவுக்கு போட்டியாக மிக குறைந்த விலையில் 100 சிசி பைக்கை வரும் மார்ச் மாதம் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹீரோ மோட்டார்ஸ்  விற்பனையில் சாதனைப் படைத்த ஸ்ப்ளண்டர் பைக் போட்டியாக குறைந்த விலையில் அதிக திறன்களுடன் ஹோண்டா நிறுவனம் புதிய பைக்கை வரும் மார்ச் மாதம் அறிமுகம் செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனம் இணைந்து இந்திய இரு சக்கர வாகன சந்தையில் எத்தனையோ மாற்றங்களையும் புதுமைகளையும் செய்திருக்கிறார்கள் அதில் மைல்கல் என்றால் ஸ்ப்ளண்டர் ( Splendor)  அறிமுகம் தான். அசத்தலான தோற்றத்துடன் 1994 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது  ஸ்ப்ளண்டர்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்னும் விற்பனையில் சாதனைப் படைத்து வருகிறது ஸ்ப்ளண்டர் பைக். ஹீரோ நிறுவனமும் ஹோண்டா நிறுவனமும் தனித்தனியாக பிரிந்த பிறகு ஸ்ப்ளண்டர் பைக்கை ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது அந்த  பைக்கிற்கு போட்டியாகத் தான் புதிய விலை குறைவான 100 சிசி பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது ஹோண்டா நிறுவனம்.

இதையும் படிங்க : மணிக்கு 120 கிமீ டாப் ஸ்பீட்... 200 கிமீ மைலேஜ் தரும் DEVOT மோட்டார்ஸின் புதிய எலெக்ட்ரிக் பைக்!

 இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய 100 சிசி பைக்கை ஹோண்டா நிறுவனம் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோ ஸ்ப்லெண்டர் பைக்கிற்கு நேரடி போட்டியாக, ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை களத்தில் இறக்கவுள்ளது.

ஹோண்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான அட்சுஷி ஒகாட்டா இந்த தகவலை ஏற்கனவே கூறியிருந்தார். கடந்த 2021ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், ஹோண்டா நிறுவனம் புதிய 100 சிசி பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதன்படி இந்த புதிய பைக்கை ஹோண்டா நிறுவனம் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன், எஸ்பி 125 மற்றும் யூனிகார்ன் ஆகிய பைக்குகள் வாடிக்கையாளர்களின் விருப்பாக இருக்கிறது. ஏற்கனவே விலை குறைந்த பைக்கான ஹோண்டா சிடி-110-ன் விற்பனையும் மிக நன்றாகவே இருக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 71,000 ரூபாய் மட்டுமே.

Also Read : Auto Expo 2023-ஐ தவறவிட்ட ஐரோப்பிய கார் நிறுவனங்கள் - ஆனால் இந்திய சந்தைக்கான குறி தப்பவில்லை!

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 110 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8.7 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. புதிதாக தாயரிக்கப்பட்டு வரும் 100 சிசி பைக்கும் கிட்டத்தட்ட இதே திறனோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவு என்பதோடு ஸ்ப்லெண்டரை விட அதிக மைலேஜ் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிகிறது. ஹோண்டாவின் புதிய மலிவு விலை பைக் விற்பனைக்கு வந்த பிறகு ஸ்ப்ளண்டர் மார்க்கெட் நிலை குறித்து எப்படி இருக்கும் என்றும் புதிய அறிமுகத்தின் திறன்கள் குறித்து பைக் புரியர்கள் ஆர்வமாகவுள்ளனர்.

First published:

Tags: Automobile, Bike, Hero, Honda