Home /News /automobile /

ஹோண்டா ஷைன் வண்டியின் விலை, சிறப்பம்சங்கள், நிறங்கள், மைலேஜ் மற்றும் பல தகவல்கள் இதோ!

ஹோண்டா ஷைன் வண்டியின் விலை, சிறப்பம்சங்கள், நிறங்கள், மைலேஜ் மற்றும் பல தகவல்கள் இதோ!

ஹோண்டா ஷைன்

ஹோண்டா ஷைன்

ஹோண்டாவில் ஷைன் மாடல் வண்டிகள் அதிக அளவில் விற்பனை ஆக கூடிய பைக்குகளில் ஒன்றாகும்.

பல வகையான வாகனங்கள் இருந்தாலும் அவற்றில் சில மாடல்களை மட்டுமே அதிக மக்கள் விரும்பி வாங்க கூடியதாக இருக்கும். குறிப்பாக ஒரு வண்டியானது நடுத்தர மக்களின் தேவைகளை பெரும்பாலும் பூர்த்தி செய்து விட்டாலே அந்த வண்டியின் விற்பனை பல மடங்காக உயர்ந்து விடும். அந்த வகையில் இந்திய சந்தையில் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவிற்கு அதிக மதிப்பு உள்ளது. ஹோண்டாவில் ஷைன் மாடல் வண்டிகள் அதிக அளவில் விற்பனை ஆக கூடிய பைக்குகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டுகளில் 125cc பிரிவில் போட்டி அதிகரித்துள்ள போதிலும், ஹோண்டா ஷைன் மாடலின் இயந்திரம் மற்றும் செயல்திறன் காரணமாக அமோக விற்பனை நடந்து வருகிறது.

குறிப்பாக இந்திய சந்தையில் அதன் இடத்தை உறுதியாக தக்க வைத்துக் கொள்ள இதுவே முதல் காரணமாக உள்ளது. இந்த வண்டியானது 50 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு அதன் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் CB ஷைன் மாடலானது 1 கோடி வண்டிகள் விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்தது. இந்த சாதனையை செய்த முதல் 125 சிசி மோட்டார் பைக் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஜின்

CB ஷைன் 2022 மாடலில் வழங்கப்படும் நான்கு-ஸ்ட்ரோக், SI, BS6 இன்ஜின் 7500 rpm திறனுடன் 10.50 bhp வெளிபாட்டையும், 6000 rpm-இல் 11 Nm அளவு முறுக்கு விசையையும் வழங்ககூடியதாகும். இந்த பைக் PGM-FI எரிபொருள் வடிவமைப்பை பயன்படுத்துகிறது. மேலும் இதில் செல்ப் மற்றும் கிக் ஸ்டார்ட் இரண்டுமே உள்ளது.

விலை

ஹோண்டா ஷைன் 2022 மாடலானது இரண்டு அடிப்படை விலையில் வழங்கப்படுகிறது. ரூ. 72,787 விலையுடன் வரும் டிரம் பிரேக் மாடல் மற்றும் ரூ. 77,582-க்கு கிடைக்கும் முன்பக்க டிஸ்க் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த விலைகள் டெல்லியில் உள்ள ஷோரூம் விலையை குறிக்கிறது, எனவே உள்ளூரில் அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகள் மற்றும் கட்டணங்களைப் பொறுத்து இதன் விலை உங்கள் ஊரில் மாறுபடலாம்.

மைலேஜ்

10.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்ட CB ஷைன் 2022 மாடலானது லிட்டருக்கு 65 கிமீ மைலேஜுடன் வருகிறது. இருப்பினும், எரிபொருள் திறன் பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒவ்வொரு சாலையின் தன்மைக்கும் ஏற்ப இது மாறுபடலாம்.

Also read... புதிய Toyota Glanza vs புதிய Maruti Suzuki Baleno... வேறுபாடுகள் என்ன?

சிறப்பம்சங்கள்

சிபி ஷைனில் உள்ள சிறப்பம்சங்களின் பட்டியல் வழக்கமாக இருக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் பைக் கன்சோலில் வழக்கமான அனலாக் ஸ்பீடோமீட்டர், ஃப்யூவல் கேஜ் மற்றும் ஓடோமீட்டர் ஆகியவற்றுடன் வருகிறது. ஷைனின் வேறு சில முக்கிய அம்சங்களில் காம்பி பிரேக் ஸ்டெம், 5 படிகள் சரிசெய்யக்கூடிய சஸ்பென்ஷன், குரோம் ஃபினிஷ் மஃப்லர் மற்றும் கார்பூரேட்டர் கவர் ஆகியவையும் தரப்படுகிறது. இந்த ஹோண்டாவின் சஸ்பென்ஷன் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளாலும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களாலும் வழங்கப்பட்டுள்ளது.

நிறம்

CB ஷைன் பிளாக், ஜென்னி கிரே மெட்டாலிக், டீசென்ட் ப்ளூ மெட்டாலிக், ரெபெல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே ஆகிய ஐந்து வண்ணங்களில் இந்த ஹோண்டோ ஷைன் வண்டி கிடைக்கிறது. பைக்கின் வடிவமைப்பிற்கு புதிய தோற்றத்தை கொடுக்க மாறுபட்ட கிராபிக்ஸ்களை இது பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Honda

அடுத்த செய்தி