ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் புதிய மைல்கல்லை எட்டி சாதனை.!

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் புதிய மைல்கல்லை எட்டி சாதனை.!

ஹோண்டா

ஹோண்டா

Honda | ராஜஸ்தானின் தபுகரா ஆலையில் ஆண்டுக்கு 1,80,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் இந்த உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிட்டெட் (HCIL) கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அதன் தபுகரா உற்பத்தி ஆலையில் செயல்பட துவங்கியதிலிருந்து, தற்போது ஒட்டுமொத்த உற்பத்தியில் 2 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹோண்டாவின் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் கார் மாடல்களில் ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா டபிள்யூஆர்வி, ஹோண்டா சிட்டி (4வது ஜென்), ஹோண்டா சிட்டி (5வது ஜென்) மற்றும் ஹோண்டா சிட்டி இ-எச்இவி உள்ளிட்டவை அடங்கும். இதனிடையே இந்நிறுவனம் தனது 20,00,000-வது யூனிட்டை ராஜஸ்தானில் உள்ள தபுகராவில் இருந்து நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கியது. மேலும் நாட்டில் அதன் செயல்பாடுகளை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.10,000-க்கு மேல் முதலீடு செய்துள்ளது.

ராஜஸ்தானின் தபுகரா ஆலையில் ஆண்டுக்கு 1,80,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் இந்த உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில்சுமார் 330 விற்பனை நிலையங்கள் மூலம் தனது வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம், சிட்டி மற்றும் அமேஸ் செடான்களை உலகம் முழுவதும் 16-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. 20 லட்சம் என்ற உற்பத்தி மைல்கல்லை குறிக்கும் வகையில் வெளியான வாகனம் நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி செடான் கார் ஆகும். ஹோண்டா சிட்டி செடான் கார் இந்தியாவில் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய தயாரிப்பாக இருந்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் இந்த மாடல் கார் மூலம் தான் நிறுவனம் நம் நாட்டில் வலுவாக காலூன்றியுள்ளது. மேலும் தற்போது வரை நாட்டின் மிகவும் வெற்றிகரமான செடான் கார்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

இந்த உற்பத்தி மைல்கல்லை எட்டியது பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா சுமுரா, 25 ஆண்டுகளாக 'மேக் இன் இந்தியா' முயற்சியில் ஹோண்டாவின் அர்ப்பணிப்புக்கு இந்த 2 மில்லியன் யூனிட் உற்பத்தி என்பது உறுதியான சான்றாகும். நாட்டில் உள்ள எங்களின் அதிநவீன உற்பத்தி முறைகள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு வழங்குவதற்கான உலகளாவிய தரத்துடன் கூடிய ஆட்டோமொபைல்கள் மற்றும் காம்போனென்ட்ஸ்களை உற்பத்தி செய்ய கூடியவை. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் மற்றும் கவலையற்ற உரிமை அனுபவத்திற்காக மிகவும் மேம்பட்ட, அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

Also Read : ஒரு முறை சார்ஜ் செய்தால் 419 கிமீ ரேஞ்ச் வழங்கும் மெர்சிடிஸ்-பென்ஸின் EQB எலெக்ட்ரிக் எஸ்யூவி.!

எங்கள் வாடிக்கையாளர்கள், டீலர் பார்ட்னர்கள் மற்றும் சப்ளையர் பார்ட்னர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஹோண்டாவை நாட்டில் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான பிராண்டாக மாற்றியதற்காக எங்களது மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம். எங்களின் முயற்சிகள் பிராந்தியம் மற்றும் உள்ளூர் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Honda, Tamil News