ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

புதிய கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்... ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்

புதிய கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்... ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்

ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்

ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்

வாகனங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், பரிமாற்ற ஊக்கத்தொகைகள், பண நன்மைகள், இலவச பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகள் போன்ற வடிவங்களில் வழங்கப்படுகின்றன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா தனது வாகனங்களின் விலைகளை குறைத்ததோடு, முன்னெப்போதும் இல்லாததைவிட சிறந்த சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதம் ஹோண்டா நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வாகனங்களுக்கு சூப்பர் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் ஹோண்டா வாகனத்தை வாங்க விரும்புகிறவர்களாக இருந்தால் இந்த டிசம்பர் மாதம் தான் சரியான நேரம்.

  வாகனங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், பரிமாற்ற ஊக்கத்தொகைகள், பண நன்மைகள், இலவச பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகள் போன்ற வடிவங்களில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா தயாரிப்புகளில் தள்ளுபடியுடன் கிடைக்கும் வாகனங்கள் குறித்த விரிவான தகவலை பின்வருமாறு காணலாம்.

  ஹோண்டா சிட்டி 5வது அண்ட் 4வது ஜென் (Honda City 5th and 4th Gen): ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மற்றும் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டியின் அனைத்து பெட்ரோல் வேரியண்ட் மாடல்களுக்கும் முறையே ரூ.45,108 மற்றும் ரூ.22,000 வரை தள்ளுபடியை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. 5வது தலைமுறை ஹோண்டா சிட்டியை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் ரூ.7,500 பண தள்ளுபடி மற்றும் ரூ.8,108 மதிப்புள்ள உணபகரணங்கள் போன்ற சலுகைகளை பெறலாம்.

  Also Read : குளிர்காலத்தில் உங்கள் கார்களை சரியான முறையில் பராமரிக்க டிப்ஸ்!

  கூடுதலாக, நிறுவனம் இந்த டிசம்பரில் ஆட்டோமொபைல் எக்ஸ்சேஞ் செய்வோருக்கு ரூ.15,000 கூடுதல் தள்ளுபடியையும் வழங்குகிறது. இதனுடன், ரூ.5,000 லாயல்டி போனஸையும் ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி 4வது தலைமுறைக்கான சலுகைகளில் ரூ.5,000 லாயல்டி போனஸ், ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

  புதிய ஹோண்டா அமேஸ் (New Honda Amaze)

  ஆண்டின் இறுதி மாதத்தில், ஹோண்டாவின் செடான் அமேஸ் வாகனத்தை வாங்குவோர் ரூ.15000 கூடுதல் நன்மைகளைப் பெறலாம். நிறுவனம் ரூ. 5,000 வாடிக்கையாளர் லாயல்டி பலனை வழங்குகிறது. இதுதவிர, வாடிக்கையாளர்கள் ரூ.6,000 ஹோண்டா ஆட்டோமொபைல் எக்ஸ்சேஞ்ச் வெகுமதியையும், ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறுவார்கள்.

  Also Read : ஒரே நாளில் 10,000 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் டெஸ்ட் ரைடு - டெலிவரி எப்போது?

  ஹோண்டா WR-V (Honda WR-V)

  WR-V வாகனத்திற்கு ரூ.28,000 வரை தள்ளுபடியுடன் பெறலாம். இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கான பல நன்மைகளை உள்ளடக்கியது. அதாவது ஆட்டோமொபைல் பரிவர்த்தனை மதிப்பு ரூ. 10,000, ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ. 5,000, ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 9000, மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4000 ஆகியவை இதில் அடங்கும்.

  ஹோண்டா ஜாஸ் (Honda Jazz)

  ஹோண்டா ஜாஸின் அனைத்து பெட்ரோல் மாடல்களுக்கும் நிறுவனம் ரூ.35,147 வரை கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது. இதில் ரூ. 10,000 ரொக்க தள்ளுபடி அல்லது ரூ. 12,147 மதிப்பிலான உபகாரணங்கள், ரூ. 2,000 கார் பரிமாற்ற ஒப்பந்தம், ரூ. 5,000 லாயல்டி போனஸ் போன்ற சலுகைகள் அடங்கும். இந்த அற்புதமான ஒப்பந்தங்களுடன், நிறுவனம் ரூ.9,000 ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் சிறப்பு சலுகையையும் வழங்குகிறது.

  இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் உள்ளூர் ஹோண்டா டீலர்ஷிப்கள்/ஷோரூம்களுக்குச் சென்று புதிய காரை தங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்வதன் மூலம் இந்த அருமையான தள்ளுபடி சலுகைகளை பெறலாம். இந்த ஒப்பந்தம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Honda