அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவன கார்களுக்கு ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி..

ஹோண்டாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஜாஸ் அதிகபட்சமாக ரூ. 40,000 சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 25,000 வரை ரொக்க போனஸ் மற்றும் ரூ. 15,000 கூடுதல் விசுவாசம் அல்லது பரிமாற்ற போனஸ் ஆகியவை அடங்கும்.

அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவன கார்களுக்கு ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி..
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 7, 2020, 2:54 PM IST
  • Share this:
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்களுக்கான தேவையும் காணப்படுகிறது. உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களில் பெரும்பாலோர் பண்டிகை காலங்களில் பல யூனிட்களை விற்க பெரும் தள்ளுபடிகள் மற்றும் நன்மை ஒப்பந்தங்களை வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் ஹோண்டா கார்ஸ் பண தள்ளுபடிகள், பரிமாற்ற நன்மைகள் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.

ஹோண்டாவின் மாடல்களான ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி, டபிள்யூஆர்-வி, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹோண்டா சிவிக் ஆகிய கார்களில், மாறுபாட்டை பொறுத்து வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை சலுகைகள் வழங்குகிறது.

இந்த சலுகை ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அல்லது இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பிற்கும் செல்லுபடியாகும். மேலும் இந்த தள்ளுபடி சலுகை அக்டோபர் 1 முதல் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது மாதிரி வாரியான சலுகை விவரங்களின் பட்டியலை பார்ப்போம்.


ஹோண்டா அமேஸ்:

ஹோண்டாவின் நுழைவு நிலை செடான் மாடலான அமேஸ், பெட்ரோல் பதிப்பில் அதிகபட்சமாக ரூ. 47,000 மற்றும் டீசல் பதிப்பிற்கு ரூ. 30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய கார்களுக்கான பரிமாற்ற போனஸாக ரூ. 15,000 வரை பெறலாம். நான்காவது மற்றும் ஐந்தாம் ஆண்டிற்கான கூடுதல் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்பாக ரூ. 12,000 மதிப்புடையது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ரூ.10,000 மற்றும் ரூ. 20,000 ரொக்க தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி:ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிவிக், பரிமாற்ற போனஸ் மற்றும் ரூ. 30,000 வரை விசுவாச போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், புதிய ஜென் செடான் அவர்களின் புதிய பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் ரூ. 30,000 வரை சலுகைகளுடன் கிடைக்கும்.

Also read... புதிய அம்சங்களுடன் இந்தியாவில் தொடங்கவுள்ள MG ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனை..ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி:

இந்திய சந்தைக்கான ஹோண்டாவின் துணை காம்பாக்ட் எஸ்யூவி இப்போது பிஎஸ்- 6 தரங்களுடன் இணங்குகிறது. டபிள்யூ.ஆர்-வி இப்போது ரூ. 40,000 வரை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் அதன் அனைத்து மாடல்களிலும் ரூ. 25,000 வரை ரொக்க தள்ளுபடியுடனும் இது வருகிறது, மற்றும் விசுவாச போனஸ் அல்லது ரூ. 15,000 வரை பரிமாற்ற போனஸுடன் வருகிறது.

ஹோண்டா ஜாஸ்:

ஹோண்டாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஜாஸ் அதிகபட்சமாக ரூ. 40,000 சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 25,000 வரை ரொக்க போனஸ் மற்றும் ரூ. 15,000 கூடுதல் விசுவாசம் அல்லது பரிமாற்ற போனஸ் ஆகியவை அடங்கும்.

ஹோண்டா சிவிக்:

இவை அனைத்திலும் மிகப்பெரிய நன்மை சிவிக், ஹோண்டாவின் பிரீமியம் செடான் மாடலில் உள்ளது. இது சமீபத்தில் அதன் புதிய டீசல் என்ஜின் மாறுபாட்டின் பிஎஸ்- 6 தரத்துடன் பொருந்தும்படி புதுப்பிக்கப்பட்டது. டீசல் பதிப்பில் அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சம் வரை ரொக்க தள்ளுபடியும், ரூ.1 லட்சம் வரை சலுகைகளுடன் பெட்ரோல் பதிப்பிலும் வழங்கப்படுகிறது.

மேலும் பண்டிகை காலங்களில் ஹோண்டா தனது விற்பனையை அதிகரிக்க ஆர்வமாக இருந்தும், ​​அதன் முதன்மை மாடலான சி.ஆர்-வி மற்றும் பழைய ஹோண்டா சிட்டி தள்ளுபடி திட்டத்தில் இடம்பெறவில்லை.
First published: October 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading