இந்தியாவில் இரு சக்கர வாகன உற்பத்தியைத் தொடங்க ஹோண்டா, யமஹாவுக்கு அனுமதி..!

ஹோண்டா

சுகாதார கட்டுப்பாடுகளும் உற்பத்தி சாலைகளில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • Share this:

  இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனத்துக்கு அரசு கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.


  கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் உற்பத்திப் பணிகளைத் தொடங்குவதில் பல கட்ட சவால்கள் உள்ளதென இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நிறுவனம் மட்டுமல்லாது யமஹா நிறுவனமும் தற்போது உற்பத்தியைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.


  இதற்காக மத்திய அரசின் அனுமதி பெற்று அதன் பின்னர் உற்பத்தித் தொழிற்சாலை அமைந்திருக்கும் மாநில அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுக்கு ஏற்ப வாகன உற்பத்தி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.


  கூடுதலாக, சுகாதார கட்டுப்பாடுகளும் உற்பத்தி சாலைகளில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தாலும் பணியாளர்களை வர வைப்பது, விநியோகஸ்தர்களை இணைப்பது, விற்பனை எனக் கடுமையான சவால்கள் முன் நிற்பதாக ஹோண்டா விற்பனைப் பிரிவு தலைவர் யத்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


  மேலும் பார்க்க: புதிய மஹிந்திரா BS6 KUV100 NXT இந்தியாவில் அறிமுகம்..!
  Published by:Rahini M
  First published: