இந்தியாவுக்கென 5 புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்யும் ஹோண்டா!

2020 ஹோண்டா CB1000R

2020 தொடக்கத்தில் CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, CRF1100L, CB1000R ஆகிய பைக்குகள் அறிமுகம் ஆக உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் பைக் விற்பனைச் சந்தையைக் கைப்பற்ற புதிதாக 5 மாடல் பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ப்ரீமியம் ரக பைக்குகளுக்கான பிரத்யேக விற்பனையகமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் ஹோண்டா இந்தியாவில் பிக்விங் என்றதொரு திட்டத்தை அறிமுகம் செய்தது. தொடர்ந்து விற்பனையை அதிகரிக்க ப்ரீமியம் ரக பைக்குகளில் 5 புதிய மாடல்கள் விற்பனைக்கு வர உள்ளன.

இதுகுறித்து ஹோண்டா துணைத் தலைவர் யத்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், “நகர்ப்புற ரைடிங், ரேஸ், சொகுசான ரைடிங், ஜாலியான ரைடிங் என அத்தனைக்கும் ஏற்ற வகையில் ஹோண்டா பைக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ப்ரீமியம் ரக பைக்குகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் VI விதிமுறைக்கு ஏற்ப புதிய பைக்குகளும் வெளியாக உள்ளன. சர்வதேச அளவில் 13 மாடல்களும் இந்திய அளவில் 5 மாடல்களும் களம் இறங்க உள்ளன. விற்பனை மற்றும் சேவைப் பிரிவுகள் நாடு முழுவதிலும் உள்ள 75 நகரங்களில் முன்னெடுக்கப்பட உள்ளன” என்றார்.

2020 தொடக்கத்தில் CBR1000RR-R Fireblade, CBR1000RR-R Fireblade SP, CRF1100L, CB1000R ஆகிய பைக்குகள் அறிமுகம் ஆக உள்ளன.

மேலும் பார்க்க: அக்டோபர் மாத விற்பனையில் முதலிடத்தில் ஹூண்டாய் - டாப் கார் எது..?

மேற்கு வங்கத்திலும் பிரபலமாகும் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல்!
Published by:Rahini M
First published: