Home /News /automobile /

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி... சூடுபிடிக்கும் ஹோண்டா மோட்டார்ஸ் வியாபாரம்.! 

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி... சூடுபிடிக்கும் ஹோண்டா மோட்டார்ஸ் வியாபாரம்.! 

Honda

Honda

Honda Motors | சமீபத்தில் கூட ஹோண்டா நிறுவனத்தின் முன்னணி இருசக்கர வாகனமான ஷைன் இந்தியாவில் 1 கோடி யூனிட்கள் விற்பனையாகி மைல்கல் சாதனை படைத்தது.

இந்தியாவில் கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (எச்எம்எஸ்ஐ) நிறுவனம் முன்னணி வகித்து வருகிறது. குறிப்பாக டாப் பிராண்ட்களை சேர்ந்த, நவீன வசதிகளுடன் கூடிய பல இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், ஹோண்டாவின் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தனி மவுசு உள்ளது. காரணம் இந்திய மக்களின் மனநிலையை நன்கு அறிந்த ஹோண்டா நிறுவனம், அதிக மைலேஜ் கொடுக்க கூடிய, பட்ஜெட் ப்ரெண்ட்லி இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதே ஆகும்.

சமீபத்தில் கூட ஹோண்டா நிறுவனத்தின் முன்னணி இருசக்கர வாகனமான ஷைன் இந்தியாவில் 1 கோடி யூனிட்கள் விற்பனையாகி மைல்கல் சாதனை படைத்தது. இந்தியாவில் 125 சிசி பைக்குகள் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஹோண்டா நிறுவனம், தனது 125சிசி பைக்கான ‘SP ஷைன் 125’ மாடலை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சுமார் 250 யூனிட் ‘SP ஷைன் 125’ பைக்குகளை கப்பல் மூலமாக கடந்த ஜூலை 22ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளது. அவை அனைத்துமே ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள தபுகாரா ஆலையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்தியாவில் ‘SP ஷைன் 125’ என்ற பெயரில் விற்கப்படும் ஹோண்டா பைக்குகள், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 'CB125F' என்ற பெயரில் விற்பனையாக உள்ளன.



ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (எச்எம்எஸ்ஐ) இன்று தனது 125சிசி மோட்டார் சைக்கிள் எஸ்பி 125, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதாக அறிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் CBU பாதை வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது மற்றும் இந்த சந்தைகளில் 'CB125F' என விற்கப்படும்.

Also Read : ஸ்கார்பியோ எஸ்யூவி மீது ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - அசத்தும் மஹிந்திரா.! 

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகடா கூறுகையில், “இந்த வளர்ச்சியானது, உலகளாவிய அளவில் இந்தியாவில் உற்பத்தி திறன்களை விரிவுபடுத்தும் எங்களின் நீண்டகாலத் திட்டங்களுக்கான முதல் படியாகும். HMSI இன் நம்பகமான தரம் உலகெங்கிலும் உள்ள 38 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருவதால், உலகளாவிய சந்தைகளில் ஏற்றுமதி தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு முன்னேறி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.



SP ஷைன் 125 சிறப்பம்சங்கள்:

SP125 பைக்கில் 125cc HET இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.72 பிஹெச்பி திறனையும், 10.9 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. முழு டிஜிட்டல் மீட்டர், சராசரி எரிபொருள் திறன், நிகழ்நேர எரிபொருள் திறன், LED DC ஹெட்லேம்ப், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சுவிட்ச், ஒருங்கிணைந்த ஹெட்லேம்ப் பீம்/பாஸிங் சுவிட்ச், ஈகோ இண்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது.

Also Read : செருப்பு அணிந்து டூ-வீலர் ஓட்டினால் ரூ.1000 அபராதம் - இந்தியாவில் இப்படியெல்லாம் கூட போக்குவரத்து விதிகள் இருக்கா.?

உலகளவில் விரைவாக விரிவடைந்து வரும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட், முதன் முறையாக தனது ஆக்டிவா ஸ்கூட்டர் மூலமாக 2001ம் ஆண்டு முதல் ஏற்றுமதியை தொடங்கியது. தற்போது​​ ஆசியா, ஓசியானியா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகளில் 19 வகையான பைக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Export, Honda

அடுத்த செய்தி