முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / வாவ் சொல்ல வைக்கும் ஹோண்டா ஆக்டிவாவின் புதிய ஸ்டைலிஸ் ஸ்மார்ட் ஸ்கூட்டார்கள்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்

வாவ் சொல்ல வைக்கும் ஹோண்டா ஆக்டிவாவின் புதிய ஸ்டைலிஸ் ஸ்மார்ட் ஸ்கூட்டார்கள்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா

ஹோண்டா

2023 Honda Activa H-Smart Scooter | ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா சமீபத்தில் ஹோண்டா ஸ்மார்ட் கீ சிஸ்டமுடன் ஆல்-நியூ 2023 ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட் (2023 Honda Activa H-Smart) ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த பல ஆண்டுகளாக ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டரானது மிக பிரபலமான மட்டும் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. இந்நிலையில் ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியா நிறுவனம், ஆக்டிவா எச்-ஸ்மார்ட்டை நாட்டில் ரூ.74,356 (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஆக்டிவா எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரானது ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் உள்ளிட்ட 3 வேரியன்ட்ஸ்களில் வருகிறது.

ஹோண்டா ஸ்மார்ட் கீ-யுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2023 ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட் ஸ்கூட்டரானது ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் ஃபைண்ட், ஸ்மார்ட் ஸ்டார்ட், ஸ்மார்ட் சேஃப் மற்றும் எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச் போன்ற பல அம்சங்களை பெற்றுள்ளது. ஹோண்டா ஸ்மார்ட் கீ-யில் ஒரு immobilizer system உள்ளது. இது ரிஜிஸ்ட்டர்ட் செய்யப்படாத கீ எஞ்சினை ஸ்டார்ட் செய்வதை தடுக்கிறது.

இந்த 2023 ஆக்டிவா ஸ்கூட்டர் எல்இடி ஹெட்லேம்ப், பாஸிங் ஸ்விட்ச், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், 18-லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜை அணுக தனித்துவமான டபுள்-லிட் ஃப்யூவல் ஓபனிங் சிஸ்டம், 5-இன்-1 லாக், சில்வர் கிராப்ரைல் மற்றும் புதிய ஃப்யூயல் எஃபிசியன்ட் டயர்களுடன் கூடிய புதிய அலாய் வீல்ஸ் ஷாட் (alloy wheels shod) உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ஹோண்டாவால் உருவாக்கப்பட்டுள்ள ஃப்யூயல் எஃபிசியன்ட் டயர்கள், புதிய டயர் கலவை தொழில்நுட்பத்துடன் ரோலிங் ரெசிஸ்டன்ஸை 15-20% குறைக்கிறது.

புதிய ஸ்மார்ட்டர் ஆக்டிவா 2023-ஐ அறிமுகப்படுத்தி பேசிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான Atsushi Ogata, எங்களது ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக உள்ளது. எனவே எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவ்வப்போது பல அப்டேட்ஸ்கள் செய்யப்பட்டு புதுப்புது ஆக்டிவா மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் புதிய OBD2 compliant ஆக்டிவா 2023 ஸ்கூட்டரை செக்மென்ட் -ஃபர்ஸ்ட் அம்சங்களுடன் வெளியிட்டுளோம் என்றார்.

Also Read : மாட்டு சாணத்தால் இயங்கும் கார் - மாருதி சுசுகி நிறுவனத்தின் பலே திட்டம்.!

இந்த ஸ்கூட்டரின் பிற ஸ்டைலிங் சிறப்பம்சங்களில் 3D சின்னம், சில்வர் கிராப்ரைல் மற்றும் சைட் விங்கர்ஸ்களுடன் கூடிய டெயில்-லேம்ப் உள்ளிட்டவை அடங்கும். இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்களில் காம்பி-பிரேக் சிஸ்டம் (CBS), டெலிஸ்கோப் ஃப்ரன்ட் சஸ்பென்ஷன், 3-ஸ்டெப் அட்ஜஸ்ட்டபிள் ரியர் சஸ்பென்ஷன், 12-இன்ச் ஃப்ரன்ட் வீல் மற்றும் இன்ஜின் இன்ஹிபிட்டருடன் சைட் ஸ்டாண்ட் ஆகியவை அடங்கும்.

ஆக்டிவா 2023 அறிமுகம் குறித்து பேசிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா உயரதிகாரி யோகேஷ் மாத்தூர் கூறுகையில், தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்வில் வசதிகளை வழங்குவதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியடைகிறது. கடந்த காலத்திலும் கூட நாங்கள் எங்கள் தயாரிப்புகளில் eSP டெக்னலாஜி, டபுள் லிட் எக்ஸ்டெர்னல் ஃப்யூயல் ஓப்பனிங் சிஸ்டம் மற்றும் காம்பி பிரேக் சிஸ்டம் (CBS) போன்ற பல தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

Also Read : குறைந்த விலை, ஹைடெக் வசதிகள்.. ஹீரோவின் புதிய Maestro Xoom ஸ்கூட்டர் அறிமுகம்

2023 ஹோண்டா ஆக்டிவா அதே OBD2 compliant 110cc PGM-FI பெட்ரோல் எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) மூலம் இயக்கப்படுகிறது. பேர்ல் சைரன் ப்ளூ, டீசென்ட் ப்ளூ மெட்டாலிக், ரெபெல் ரெட் மெட்டாலிக், பிளாக், முத்து ப்ரீஷியஸ் ஒயிட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் உள்ளிட்ட 6 கலர் ஆப்ஷன்களில் இது கிடைக்கும். இதன் டீலக்ஸ் வேரியன்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை Rs. 77,036-ஆகவும், ஸ்மார்ட் வேரியன்ட் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.80,537-ஆகவும் இருக்கிறது.

First published:

Tags: Automobile, Honda Activa, Scooters, Tamil News