ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஆக்டிவா ஸ்கூட்டரை விட குறைந்த விலையில் ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஆக்டிவா ஸ்கூட்டரை விட குறைந்த விலையில் ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மாதிரி படம்

மாதிரி படம்

ஹோண்டாவும் வெகு விரைவிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹோண்டாவின் பெஸ்ட் செல்லிங் மாடலான ஆக்டிவாவை விட, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைவாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது தான்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதுமே எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாகப்பட்டு வருகின்றன.

  இருசக்கர வாகனத்தைப் பொறுத்தவரை ஓலா எலெக்ட்ரிக் மற்ற பெரிய பிராண்டுகளை முந்திக்கொண்டு இரண்டு மாடல்களை அறிமுகம் செய்து விட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும்மே புதிய எலெக்ட்ரிக் வாகனங்களோடு அணிவகுக்க தயாராகி வருகின்றனர்.

  ஹோண்டாவும் வெகு விரைவிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹோண்டாவின் பெஸ்ட் செல்லிங் மாடலான ஆக்டிவாவை விட, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைவாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது தான். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் பிரெசிடன்ட் ஆன அட்சுஷி ஓகாடா இதை உறுதி செய்துள்ளார். 2030 க்குள் 10,00,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆவது விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அதற்கான முயற்சிகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டு மாடல்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார்.

  ஒவ்வொரு புதிய மாடலை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அதன் தேவை, சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்கப்படும் என்பதை பற்றிய ஆய்வுகள் எல்லா நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்படும். ஹோண்டாவின் எலக்ட்ரிக் வாகனத்துக்கும், புதிய வாகனங்களுக்கான ஆய்வு ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், தற்போது உற்பத்தி நிலையில் இருப்பதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை 2030 ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் குறைந்தபட்சம் 30 சதவிகிதமாவது ஹோண்டாவின் பங்கு இருக்க வேண்டுமென்று நிறுவனம் விரும்புகிறது. அதுமட்டும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு மாடல்களோடு நின்றுவிடாமல் பல மாடல்களில் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் திட்டம் உள்ளது.

  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில், ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா மோனிகரைப் பயன்படுத்தலாம். தற்போது உற்பத்தியில் இருக்கும் பெரும்பாலான எலக்ட்ரிக் வாகனங்கள் மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனுடன் வருகிறது, இந்த மாடலிலும் அதைப் பயன்படுத்தலாம். குறைவானது முதல் அதிக பவர் கொண்ட மாடல்கள் வரை, பல வரம்பில் ஹோண்ட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  தற்போது ஆக்டிவாவின் விலை ₹72,000 ஆகும். எனவே இந்த எலெக்ட்ரிக் வாகனமும் இதே விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டு அதாவது 2023 – 2024 ஆம் ஆண்டில் ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Read More: இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் எதற்கு எனத் தெரியுமா? 

  பல்வேறு வரம்பில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் மிட் ரேன்ஜ் தயாரிப்புகள் தற்போது கூறப்பட்டுள்ள இருக்கும் விலையை விட குறைவான விலையில் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

  ஹீரோ, பஜாஜ், ஓலா, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Electric bike, Honda, Honda Activa, Scooters