Home /News /automobile /

21 ஆண்டுகளில் 30 லட்சம் மோட்டார் வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த ஹோண்டா நிறுவனம்!

21 ஆண்டுகளில் 30 லட்சம் மோட்டார் வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த ஹோண்டா நிறுவனம்!

Honda

Honda

Honda India | 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹோண்டா தனது நிறுவனத்தை தொடங்கியது. இது அறிமுக மாடலாக ஆக்டிவா இருசக்கர வாகனத்தை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தது. ஹோண்டாவின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியானது 2016 ஆம் ஆண்டில் 15 லட்சத்தைத் தாண்டியது.

மேலும் படிக்கவும் ...
இந்தியாவில் பல நிறுவனங்கள் வாகனங்கள் சார்ந்த விற்பனையை நடத்தி வருகின்றன. அவற்றில் பல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக வாகனங்களின் உற்பத்தியானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் கூடுதல் ஆட்களை நியமித்தும் உள்ளனர். இதன்மூலம் வரும் நிதியாண்டில் அதிக வாகனங்கள் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முன்னிலை வாகன நிறுவனமான ஹோண்டா தனது 21 ஆம் ஆண்டு பயணத்தை தற்போது கடந்துள்ளது. இந்நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது நிறுவனத்தை தொடங்கியது. இது அறிமுக மாடலாக ஆக்டிவா இருசக்கர வாகனத்தை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தது. ஹோண்டாவின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியானது 2016 ஆம் ஆண்டில் 15 லட்சத்தைத் தாண்டியது. அடுத்த 15 லட்சம் வாகன ஏற்றுமதியை கடந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்தது. இது முந்தைய காலத்தை விடவும் அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டதாக உள்ளது. அதாவது இதன் வளர்ச்சியானது மூன்று மடங்கு அதிகமாக இருந்தது என்று ஹோண்டா நிறுவனம் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம் ஒரு புதிய வெளிநாட்டு வணிகத்தை நிறுவியது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு அதன் உலகளாவிய ஏற்றுமதி தடத்தை விரிவுப்படுத்தியது. கூடுதலாக, இந்தையாவில் ஹோண்டா நிறுவனமானது குஜராத்தின் வித்தலாபூரில் உள்ள அதன் நான்காவது தொழிற்சாலையில் இருந்து உலகளாவிய இயந்திரங்களின் உற்பத்தியையும் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதற்கான அனுமதியை பெற்று, உற்பத்தியை தொடங்கியது.



இதே போன்று ஹோண்டா நிறுவனமானது இதர 29 சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. டியோவுடன் சேர்த்து இதுவரை 18 இரு சக்கர வாகன மாடல்களைக் ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் டியோ மாடலானது ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் மிகவும் விருப்பமான இருசக்கர வாகனமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஹோண்டா நிறுவனம் 30 லட்சம் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.

Also Read : ‘இந்தியாவிலும் இனி பறக்கும் கார்’... பிரபல ஜப்பான் நிறுவனத்துடன் சுசூகி போட்ட ஒப்பந்தம்!

இந்த மாபெரும் சாதனை குறித்து ஹோண்டாவின் இயக்குனரிடம் கேட்டபோது, " டியோ வண்டி உட்பட எங்கள் ஏற்றுமதி பகுதியை மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். இதன் தரத்தையும், உற்பத்தியையும் மேம்படுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று ஹோண்டாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனரான யாத்விந்தர் சிங் குலேரியா தெரிவித்தார். வரும் காலங்களில் இது போன்ற அதிக வளர்ச்சியையும், உற்பத்தி தரத்தையும் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து மக்கள் எதிர் பார்க்கலாம். அதே போன்று அதிக விற்பனை சதவிகிதத்தை பொறுத்து, ஹோண்டா வாகனங்களின் விலையும் மாறலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Honda, India

அடுத்த செய்தி