ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G) இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். ஆக்டிவா 6ஜி இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவற்றில் ஒன்று ஸ்டாண்டர்ட் மற்றொன்று டீலக்ஸ் ஆகும். இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை எக்ஸ்-ஷோரூம் படி ரூ.67,843 ஆகும். இதுதவிர, ரூ.69,343 என்ற விலையில் 20வது ஆண்டுவிழா பதிப்பும் கிடைக்கிறது. இருப்பினும், தற்போது இந்த வாகனத்திற்கு ஹோண்டா நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் இப்போது 5 சதவீதம் கேஷ்பேக்கை பெறலாம். இதன் மூலம் நீங்கள் ரூ.3,500 சேமிக்கலாம்.
இருப்பினும், இந்த சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் குறைந்தபட்ச பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.40,000 ஆக இருக்க வேண்டும். இந்த சலுகை ஏற்கனவே மே 1ம் தேதியில் இருந்து தொடங்கி விட்டது. மேலும் ஜூன் 30ம் தேதி வரை இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பை நீங்கள் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.
ஆறாவது தலைமுறை ஆக்டிவா நுட்பமான வடிவமைப்பு மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன் பல புதிய அம்சங்களையும் உபகரணங்களையும் வழங்குகிறது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், மல்டி-ஃபங்க்ஷன் இக்னிஷன் சுவிட்ச், வெளிப்புற பியூயல் கேப் மற்றும் பிறவற்றின் தொகுப்பும் அடங்கும். இதன் டாப்-எண்ட் பதிப்பு எல்.ஈ.டி ஹெட்லேம்ப்களுடனும் மேலும் சில ஒப்பனை வேறுபாடுகளுடனும் வருகிறது.
இயந்திர ரீதியாக ஹோண்டா ஆக்டிவா 6ஜி, 110 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் யூனிட்டின் அதே பிஎஸ் 6-இணக்க பதிப்பால் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இந்த அலகு 8000 ஆர்.பி.எம்மில் 7.7 பிஹெச்பி சக்தியையும், 5,250 ஆர்.பி.எம் மணிக்கு 8.8 என்.எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும் இது ஒரு சி.வி.டி அலகுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி ஆறு வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது. அவை, கிளிட்டர் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் ஸ்பார்டன் ரெட், டாஸ்ல் மஞ்சள் மெட்டாலிக், பேர்ல் பிரீசியஸ் வைட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் பிளாக் ஆகியவை ஆகும்.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆகும். புதிய ஆக்டிவா 6ஜி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகையை நிறுவனம் அமைதியாக வழங்கி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த சலுகையைப் பெறலாம். ஆக்டிவா 6ஜி இந்தியாவில் டி.வி.எஸ் ஜூபிடர் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் போன்றவற்றுக்கு பொடியாக விற்பனையில் அசத்தி வருகிறது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.