• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கார்களுக்கு ரூ.38,000 வரை தள்ளுபடி - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம்!

கார்களுக்கு ரூ.38,000 வரை தள்ளுபடி - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம்!

ஹோண்டோ அமேஸ் கார்

ஹோண்டோ அமேஸ் கார்

Honda Discount Offers : ஹோண்டா நிறுவனம் சில வகை கார்களுக்கு ரூ.38,000 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த அதிரடி தள்ளுபடியில் நீங்கள் ஹோண்டா கார்களை வாங்கலாம்.

  • Share this:
பொதுவாக பண்டிகை காலம் வந்தாலே பல்வேறு புதிய பொருட்களை வாங்க விரும்புவோம். புத்தாடை முதல் தங்க நகைகள் வரை இதில் ஏராளமானவை அடங்கும். பண்டிகை நாட்களில் தான் ஏராளமான தள்ளபடிகளை அறிவிப்பார்கள். சில நிறுவனங்கள் பண்டிகை நாட்கள் முடியும் நேரத்தில் குறிப்பிட்ட தள்ளுபடிகளை வெளியிடுவார்கள்.

அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் சில வகை கார்களுக்கு ரூ.38,000 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த அதிரடி தள்ளுபடியில் நீங்கள் ஹோண்டா கார்களை வாங்கலாம். இனி எந்தெந்த கார்களுக்கு இந்த சிறப்பு தள்ளுபடி பொருந்தும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.,

ஹோண்டோ சிட்டி :

இந்த தள்ளுபடி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹோண்டோ சிட்டி கார் தான். 5th ஜெனரேஷன் ஹோண்டோ சிட்டி கார்களுக்கு ரூ.38,608 வரை தள்ளுபடியை பெறலாம். இதில் கேஷ் டிஸ்கவுண்ட், ரூ. 7,500 வரை போனஸ் எக்ஸ்சேன்ச், ரூ.5,000 லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.8,000 வரையிலான தள்ளுபடிகள் அடங்கும். மேலும் ரூ.8,108 மதிப்புள்ள இதர பொருட்களை இலவசமாக வழங்குகிறது.

ALSO READ |  லீக்கான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 புகைப்படம் - சுவாரஸ்யமான புதிய அப்டேட்

ஹோண்டா கார்களுக்கு ரூ.10,000 எக்ஸ்சேன்ச் போனஸ் உள்ளது. இந்த நியூ-ஜென் ஹோண்டா சிட்டியின் விலை ரூ.11.16 லட்சத்தில் இருந்து ரூ.15.11 லட்சம் வரை அந்தந்த மாடலுக்கு ஏற்ப விலை மாறுபடுகிறது. நீங்கள் 4th ஜென் ஹோண்டோ சிட்டி காரை வாங்கினால், அதற்கு எந்த கேஷ் டிஸ்கவுண்டும் இல்லை. ஆனால் ரூ.5,000 லாயல்டி போனஸ் உள்ளது. இதற்கு ரூ.10,000 எக்ஸ்சேன்ச் போனஸ் மற்றும் ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் :

எல்லா வகையான ஹோண்டோ அமேஸ் கார்களுக்கும் ரூ.15,000 வரை தள்ளுபடிகள் உள்ளன. ஆனால் இதில் கேஷ் டிஸ்கவுண்ட் சேராது. இந்த மாடல் கார்களுக்கு ரூ.5,000 லாயல்டி போனஸ், ரூ.6,000 எக்ஸ்சேன்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் ரூ.6.32 லட்சம் முதல் ரூ.11.15 லட்சம் வரை விற்கப்படுகிறது.

ALSO READ |  பிரீமியம் ஹேட்ச்பேக் வாங்க நினைப்பவர்கள் Tata Altroz-ஐ தேர்வு செய்வதற்கு தேவையான 5 காரணங்கள்!

ஹோண்டா ஜாஸ் :

ஹோண்டா ஜாஸ் மாடல் கார்களுக்கு ரூ.36,147 வரை தள்ளுபடி பெறலாம். இதில் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.12,147 மதிப்புள்ள இதர இலவச பொருட்கள் அடங்கும். மேலும் எக்ஸ்சேன்ச் போனஸாக ரூ.5,000 வரை பெறலாம். கூடவே பழைய ஹோண்டா கார்களை மாற்றி கொண்டு ஹோண்டா ஜாஸ் வாங்கினால் ரூ.10,000 எக்ஸ்சேன்ச் போனஸ் தரப்படுகிறது. இதற்கு ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியும், ரூ.5,000 லாயல்டி போனஸும் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.65 லட்சம் முதல் ரூ. 9.89 லட்சம் வரை உள்ளது.

ஹோண்டா WR-V :

இந்த நவம்பரில் ஹோண்டா WR-V காரை வாங்கினால் ரூ.5,000 கேஷ் டிஸ்கவுண்ட் பெறலாம். இதனுடன் ரூ.6,058 மதிப்புள்ள இதர இலவச பொருட்கள் கிடைக்கும். மேலும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியும், ரூ.5,000 லாயல்டி போனஸும் கிடைக்கிறது. ஹோண்டா WR-V மாடல் காருக்கு ரூ.5,000 எக்ஸ்சேன்ச் போனஸ் தரப்படுகிறது. ஹோண்டா கார்களுக்கு ரூ.9,000 எக்ஸ்சேன்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மேற்சொன்ன கார்களை வாங்கி, சிறப்பு தள்ளுபடியை பெற்றிடுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: