ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

விரைவில் விற்பனைக்கு வர உள்ள Honda City eHEV செடான் கார்..

விரைவில் விற்பனைக்கு வர உள்ள Honda City eHEV செடான் கார்..

காட்சி படம்

காட்சி படம்

ஹோண்டா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்த சிட்டி City e:HEV sedan உற்பத்தியை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள அதன் தபுகாரா உற்பத்தி ஆலையில்  ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் Honda City e:HEV ஹைப்ரிட் செடான் காரின் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. இந்த காரை இந்தியாவில் அடுத்த மாதம் அதாவது வரும் மே மாதம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

புதிய Honda City e:HEV காரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது டீலர்ஷிப்களில் ஆரம்ப தொகை ரூ. 21,000-க்கு காரின் புக்கிங்ஸ்களை இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே தொடங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரூ.5,000 டோக்கன் தொகை செலுத்தி இந்த ஹோண்டா ஹைப்ரிட் செடானை ப்ரீ-புக் செய்யலாம்.

ஐந்தாம் தலைமுறை சிட்டியை அடிப்படையாக கொண்ட இந்த புதிய கார், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்ஸ், மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமரா, மோதல் தவிர்ப்பு பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோ ஹை-பீம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் (RDM) மற்றும் மேலும் பல அம்சங்களை உள்ளடக்கியது.

also read : இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..

City e:HEV செடான் கார் ஒரு புதிய ஹைப்ரிட் பவர் டிரெய்னை பெறுகிறது. இதில் அட்கின்சன் சைக்கிள்1.5 லிட்டர், 2 மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட 4 சிலிண்டர் எஞ்சின் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹோண்டா தனது “ஹோண்டா சென்சிங்” பாதுகாப்பு தொழில்நுட்பத்தை புதிய சிட்டி ஹைப்ரிட் காருடன் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது.

also read : உலகின் மிகப்பெரிய கார் மார்க்கெட் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட இத்தாலி.. இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்த சிட்டி ஹைப்ரிட் காரானது ஸ்டாண்டர்ட் 3 ஆண்டு அன்லிமிட்டட் கிலோ மீட்டர் வாரன்டியையும், வாங்கிய தேதியிலிருந்து ஆப்ஷனல் 5 அல்லது 10 ஆண்டுகள் வாரன்டியும் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக இந்த காருக்கு 8 வருட வாரன்டியை / 1.60 லட்சம் கிமீ பேட்டரி வாரன்டியை ஹோண்டா இந்தியா நிறுவனம் வழங்குகிறது.

ஹைப்ரிட் டிரைவ், இன்ஜின் டிரைவ் மற்றும் ஈவி டிரைவ் உள்ளிட்ட மூன்று மோட்களில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. 1.5-லிட்டர் அட்கின்சன்-சைக்கிள் எஞ்சின் மூலம் எலெக்ட்ரிக் மில்லுடன் இணைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 124 ஹெச்பி பவர் 253 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த ஹைபிரிட் செடான் 26.5 kmpl மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, Honda City e:HEV காரின் முன் மற்றும் பின்புறம் H-மார்க் லோகோ இடம் பெறுகிறது. இந்த செடான் புதிய டயமண்ட்-கட் கருப்பு நிற அலாய் வீல்களை கொண்டுள்ளது. இந்த கார் 6.9 இன்ச் எச்டி கலர்டு TFT மீட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டியுடன் கூடிய 7.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 37+ ஹோண்டா கனெக்ட் அம்சங்கள், ஒன் டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

First published:

Tags: Honda