Home /News /automobile /

உண்மையில் மேம்படுத்தப்பட்ட Hornet 2.0 பைக்காக இருக்கிறதா Honda CB200X? - விவரம் இதோ!

உண்மையில் மேம்படுத்தப்பட்ட Hornet 2.0 பைக்காக இருக்கிறதா Honda CB200X? - விவரம் இதோ!

ஹோண்டா CB200X

ஹோண்டா CB200X

Honda Hornet 2.0-ன் விலையை விட சுமார் ரூ 13,894 அதிகம் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.1,44,500 (எக்ஸ் ஷோரூம்) ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
டூ வீலர்களை பொறுத்த வரை நாட்டில் தற்போது அட்வென்ச்சர் செக்மென்ட் சிறிது சிறிதாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த செக்மென்ட்டில் சில வாகன உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தது ரிஸ்க் எடுக்க விரும்பாததே காரணமாக இருந்தது. எனினும் இந்த நிலையை பிரபல நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், தனது ஹிமாலயன் பைக்கை அறிமுகப்படுத்தி சற்று மாற்றியது. பின் கேடிஎம் 390 அட்வென்ச்சர் உள்ளிட்ட சில பைக்குகள் இந்த பட்டியலில் இணைய துவங்கின.

இதனிடையே கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Honda CB200X பைக், Honda Hornet 2.0-ஐ அடிப்படையாகக் கொண்டது. CB200X பைக்கை ஹோண்டா நிறுவனம் ஒரு அர்பன் எக்ஸ்ப்ளோரர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பைக் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு பீஃபையர் ஏடிவி போன்ற டிசைன் மற்றும் ப்ளாக் பேட்டர்ன் டயர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகவும் மலிவு விலை கொண்ட சாகச பைக்காக ஹோண்டா நிறுவனம் தனது Honda CB200X பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

Honda Hornet 2.0-ன் விலையை விட சுமார் ரூ 13,894 அதிகம் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.1,44,500 (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இந்த பைக் Hornet 2.0-க்கு தகுதியான மாற்றாக இருக்கிறதா, நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலைக்கேற்ற செயல்திறன்களை கொண்டுள்ளதா என்பதை பற்றி பார்க்கலாம்.

Honda CB200X பைக் குறித்து நம் மனதில் எழும் கேள்விகளுக்கான விடை காண, ஹார்னெட் 2.0 பைக்கிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். Hornet 2.0-வுடன் ஒப்பிடுகையில் இதன் காஸ்மெட்டிக் சேஞ்சஸ் பெரியளவிலான மாற்றங்களை கொண்டுள்ளது.

CB200X பைக் ஒரு செமி-நேக்ட் டிசைனில் காட்சி அளிக்கிறது. இதில் விண்ட்ஸ்கிரீன், புதிய ஹேண்டில்பார், ஃபாக்ஸ் ஏர் வென்ட்ஸ், இன்டகிரேடட் எல்இடி ப்ளிங்கர்ஸ், புதிய சீட் உள்ளிட்ட புதிய எலிமென்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள் Hornet 2.0வில் கொடுக்கப்பட்டிருக்கும் 184.4cc சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு ஃபியூயல்-இன்ஜெக்ட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.இதன் டிசைன் பற்றி பேசுகையில் CB200X பைக்கானது CB500X ஐ நினைவூட்டுகிறது. இதன் முழு LED லைட்டிங், என்ஜினை பாதுகாக்கும் பிளாஸ்டிக் பாஷ் பிளேட், மேல்நோக்கி புகையை வெளியேற்றும் எக்ஸாஸ்ட், பைக்கின் ஹேண்டில்பார் கிரிப்பில் பில்ட்-இன் இண்டிகேட்டருடன் கூடிய ஒரு knuckle protector உள்ளிட்ட பல அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் ஃபிட் மற்றும் ஃபினிஷ் நேர்த்தியாக இருக்கிறது. CB200X பைக் எர்கனாமிக்ஸ் அடிப்படையில் வருகிறது. எனவே இந்த பைக் ஒரு புதிய ஹேண்டில்பாரை கொண்டுள்ளது.

Also read... அறிமுகமான 20 மாதங்களுக்குள் 1 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை கடந்த டாடா ஆல்ட்ரோஸ்!

இது ரைடருக்கு னால வசதியான பயண அனுபவத்தை தருகிறது. இது மோட்டார் சைக்கிளை டிராஃபிக்கில் சுலபமாக எடுத்து செல்ல உதவுவதோடு, நெருக்கமான பார்க்கிங்கில் கூட எளிதாக பார்க் செய்ய உதவுகிறது. இந்த பைக் ஹார்னெட் 2.0-வில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டிருந்தாலும், CB200X பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஹேண்டில் பாருக்கு இடமளிக்கும் வகையில் ரைடரிலிருந்து சிறிது தொலைவில் வைக்கப்பட்டுள்ளது.

இது கியர் பொசிஷன் இன்டிகேட்டர், 2 ட்ரிப் மீட்டர்ஸ், ஒரு டேகோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டருடன் பேட்டரிவோல்ட்மீட்டர் போன்ற முக்கிய தகவல்களைக் இந்த அமைப்பு காட்டுகிறது. CB200X முன்பக்கத்தில் கோல்டன் USD ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக்கை கொண்டுள்ளது. 17 பிஎச்பி மற்றும் 16.1 என்எம் டார்க்கை வெளியிடும் எஞ்சினுடன் உள்ளது.

Hornet 2.0 பைக்குடன் ஒப்பிடும் போது சுப்பீரியர் பெயின்ட் ஃபினிஷ், சிறந்த ரைடிங் தோரணை, ஹோண்டாவின் நம்பகத்தன்மை, டிசைன் அம்சங்களில் செய்யப்பட்டுள்ள சிறிய மாற்றங்கள் மற்றும் சிறிய அட்வென்ச்சர் அனுபவம் உள்ளிட்டவற்றிற்காக தாராளமாக கூடுதல் காசு கொடுத்து Honda CB200X பைக்கை வாங்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Honda

அடுத்த செய்தி