₹4 லட்சம் வரையில் ஆஃபர்...இந்திய ஹோண்டா கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

ஹோண்டா

மற்றுமொரு 7 சீட்டர் எஸ்யூவி ரகமான ஹோண்டா BR-V காருக்கு 1.20 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் மட்டும் ஹோண்டா கார்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரையில் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா CR-V கடந்த ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகமானது. இந்தக் காரின் டீசல் ரகத்துக்கு 4 லட்சம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 120hp, 1.6 லிட்டர் என்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. இதனது பெட்ரோல் ரகம் 154hp, 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாகும்.

மற்றுமொரு 7 சீட்டர் எஸ்யூவி ரகமான ஹோண்டா BR-V காருக்கு 1.20 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. 119 hp, 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ரகம் மற்றும் 100hp, 1.5 லிட்டர் டீசல் என இரண்டு ரகங்கள் உள்ளன. BR-V காரின் அத்தனை ரகங்களுக்கும் தள்ளுபடி பொருந்தும்.

இதேபோல் ஹோண்டா சிவிக், ஹோண்டா சிட்டி, ஹோண்டா ஜாஸ், WR-V, அமேஸ் ஆகிய கார்களுக்கும் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாய் வரையில் விலைத் தள்ளுபடி உள்ளது.

மேலும் பார்க்க: ₹1.05 லட்சம் வரையில் தள்ளுபடி... மாருதி சுசூகி கார்களுக்கு அதிகப்படியான சலுகை!

ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு
Published by:Rahini M
First published: