Home /News /automobile /

அட்டகாசமான தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா நிறுவனம்!

அட்டகாசமான தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா நிறுவனம்!

தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா

தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா

வாகனங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஜ் ஊக்கத்தொகைகள், கேஷ் பேக் நன்மைகள், இலவச உதிரி பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் தள்ளுபடிகளும் சலுகைகளும் பல வடிவங்களில் வழங்கப்படுகின்றன.

ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்ட மாடல்களின் விலையை ஏற்கனவே குறைத்துள்ளது. ஆண்டு இறுதி தள்ளுபடி மற்றும் சலுகை என்று பல மாடல்கள் மீது கணிசமான விலை குறைப்பை அறிவித்தது. தற்போது, புத்தாண்டு சலுகை மற்றும் பொங்கல் தள்ளுபடியாக, அதன் பிரபலமான மற்றும் பெஸ்ட் செல்லிங் செடான் மாடலான ஹோண்ட சிட்டி, ஹோண்டாவின் சிறந்த ஹேட்ச்பேக் ஜாஸ், மற்றும் ஹோண்டா WR-V மீது கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.

எனவே, நீங்கள் ஹோண்டா வாகனத்தை வாங்க விரும்பினால், இந்த மாதம் வாங்கி, சிறப்புத் தள்ளுபடிகளை பெற்று பயனடையலாம். வாகனங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஜ் ஊக்கத்தொகைகள், கேஷ் பேக் நன்மைகள், இலவச உதிரி பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் தள்ளுபடிகளும் சலுகைகளும் பல வடிவங்களில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா நிறுவனத்தின் குறிப்பிட தள்ளுபடியுடன் கிடைக்கும் வாகனங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

ஹோண்டா WR-V (Honda WR-V) – தள்ளுபடி மதிப்பு ரூ. 26,000 வரை

ஹோண்டா WR-V வாகனத்தை வாங்க விரும்புபவர்கள் இந்த மாதம் ரூ. 26,000 மதிப்புள்ள எக்ஸ்சேன்ஜ் போனஸ், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி ஆகிய சலுகைகளைப் பெறலாம். ஆட்டோமொபைல் பரிவர்த்தனை மதிப்பு ரூ. 10,000 மற்றும் ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் ரூ. 5,000. நீங்கள் உங்களின் ஹோண்டா WR-V காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால், எக்ஸ்சேன்ஜ் போனஸ் ரூ. 17,000 வரை வழங்கப்படுகிறது. தற்போது கேஷ் தள்ளுபடிகள் எதுவும் இல்லை என்றாலும், கூடுதலாக கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4000 வரை வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி 4வது ஜென் (Honda City 4th Gen): தள்ளுபடி மதிப்பு ரூ. 20,000 வரை

நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டியில் ரூ. 20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆட்டோமொபைல் எக்ஸ்சேன்ஜ் செய்பவர்களுக்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்குகிறது. மேலும், ரூ.5,000 லாயல்டி போனஸையும் ரூ.9,000 மற்றும் ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி 5வது ஜென் மாடலில் நீங்கள் ரூ. 35,596 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடிகள் தவிர்த்து, ஹோண்டா நிறுவனம் ரூ. 10,596 மதிப்பில் இலவச உதிரி பாகங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 மதிப்பிலான ரொக்கத் தள்ளுபடி அல்லது இலவச உதிரி பாகங்கள் என்று ஏதேனும் ஒன்றை இலவசமாகப் பெறலாம்.

ஹோண்டா ஜாஸ் (Honda Jazz)

ஹோண்டா ஜாஸின் மாடல்களுக்கு நிறுவனம் ரூ.22,147 வரை தள்ளுபடியை வழங்குகிறது. இதில் ரூ. 10,000 ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ. 12,147 மதிப்பிலான உதிரி பாகங்கள் உள்ளிட்ட சலுகைகள் அடங்கும்.

Also read... நாட்டின் டாப் 10 நகரங்களில் 1 லட்சம் EV-க்களை களமிறக்க திட்டமிட்டுள்ள Zypp Electric!

ALSO READ |  டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

ஹோண்டா அமேஸ் (New Honda Amaze)

ஹோண்டாவின் செடான் அமேஸ் வாகனத்தை வாங்க விரும்புவர்களுக்கு ரூ.15000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக, லாயல்டி போனஸ் மற்றும் ரூ.6,000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறுவார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Honda

அடுத்த செய்தி