Home /News /automobile /

ஹோண்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்.... அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

ஹோண்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்.... அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

Honda

Honda

ஹோண்டா டபிள்யூஆர்வி - எஸ்யூவிக்கு இம்மாத தள்ளுபடியாக 3.26 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு இந்த மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்யும் ஹோண்டா அமேஸ், ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்வி, ஜாஸ் ஹேட்ச்பேக் போன்ற செடான் கார்களுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. மாடல்கள் மற்றும் சிறம்பம்சங்களைப் பொறுத்து தள்ளுபடி ரூ. 33,158 இருக்கும் என்றும், இந்த ஸ்பெஷல் தள்ளுபடி இம்மாத இறுதி வரை மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா நிறுவனம் தனது செடான்களில் ஒன்றான ஜாஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஜாஸ் பீரிமியம் ஹேட்ச்பேக்கிற்கு 10,000 வரை தள்ளுபடி அல்லது 12,158 ரூபாய் மதிப்புள்ள ஆக்சஸெரீகளை வழங்குகிறது. கார் எக்ஸ்சேஞ்ச் மீதான தள்ளுபடியாக 5 ஆயிரம் ரூபாயும், வாடிக்கையாளர் லாயல்டி போனஸாக ரூ.5 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.7 ஆயிரமும் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ. 4 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் அனைத்துமே ஜாஸின் பெட்ரோல் வகைகளுக்கு கார்களுக்கு மட்டுமே பொருந்தும். ஹோண்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, லேட்டஸ்ட் தலைமுறைக்கு ஏற்ற பிரபல பிரீமியம் செடான் காரான ஹோண்டா சிட்டி அதிக தள்ளுபடிகளை பெற்றுள்ளது. இந்த வகை காருக்கு சுமார் 30 ஆயிரத்து 396 வரை தள்ளுபடி விலை கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரொக்கமாக ரூ.5 ஆயிரம் தள்ளுபடி அல்லது 5,396 ரூபாய் மதிப்புள்ள ஆக்சஸெரீகள் வழங்கப்படும்.

    ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த நிசான் கார் நிறுவனம்..


    35,000 ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் மற்றும் ரூ.37 ஆயிரம் ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடியாக 8,000 ஆகியவை அடங்கும். இந்த தள்ளுபடிகள் அனைத்துமே பெட்ரோல் ரக கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது தலைமுறை சிட்டி மாடலுக்கும் 20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி கிடைக்கும்.

    ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்


    ஹோண்டா டபிள்யூஆர்வி - எஸ்யூவிக்கு இம்மாத தள்ளுபடியாக 3.26 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.டபிள்யூஆர்வி - எஸ்யூவின் பெட்ரோல் வகைக்கு கார் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக 10,000 ரூபாயும், ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸாக 5 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. 27,000 மதிப்புள்ள ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 4,000 கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களும் கிடைக்கும்.

    இம்மாதம் அனைத்து ஹோண்டா கார்களிலும் மிகக் குறைவான தள்ளுபடி கொண்ட காராக ஹோண்டா அமேஸ் சப்-காம்பாக்ட் செடான் உள்ளது. இருப்பினும், சிட்டி, ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி போலல்லாமல், அமேஸின் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவகை கார்களுக்கும் ஹோண்டா நிறுவனம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸாக ரூ.5,0000 ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.6,000 மற்றும் கார்ப்ரேட் தள்ளுபடியாக ரூ. 4,000 ஆகியவை வழங்கப்பட உள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Automobile, Honda

    அடுத்த செய்தி