Home /News /automobile /

ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிரீமியம் அறிமுகம்... விலை என்ன தெரியுமா.? 

ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிரீமியம் அறிமுகம்... விலை என்ன தெரியுமா.? 

Honda Activa 6G

Honda Activa 6G

Honda Activa 6G premium Edition| ஸ்டைலிஷ் லுக்கில் ஆக்டிவா 6ஜி-யை விட பிரீமியம் மாடல் அசத்தலாக இருந்தாலும் விலை அதைவிட குறைவாகவே உள்ளது. ஆம், ஆக்டிவா 6ஜி-யைக் காட்டிலும் ஆக்டிவா பிரீமியம் மாடலின் விலை 3000 ஆயிரம் ரூபாய் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooters India) அதன் பிரசித்தி பெற்ற ஆக்டிவா 6ஜி மாடலில் பிரீமியம் எடிசன் (Activa Premium Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய எடிஷனான ஆக்டிவா 6ஜி-யை விட கவர்ச்சிகரமான மேக்ஓவர்களுடன், ஹோண்டா ஆக்டிவா பிரீமியத்தின் வெளிப்புறத்தோற்றம் கலக்கி வருகிறது.

ஸ்டைலிஷ் லுக்கில் ஆக்டிவா 6ஜி-யை விட பிரீமியம் மாடல் அசத்தலாக இருந்தாலும் விலை அதைவிட குறைவாகவே உள்ளது. ஆம், ஆக்டிவா 6ஜி-யைக் காட்டிலும் ஆக்டிவா பிரீமியம் மாடலின் விலை 3000 ஆயிரம் ரூபாய் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை 75 ஆயிரத்து 400 ரூபாய் ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஆக்டிவா 6ஜி பிரீமியத்தை அதிக விளிம்புகள் மற்றும் வளைவுகள் கொண்ட சில்கி லுக்கில் வடிவைத்துள்ளது. அதேபோல் பிரீமியம் மாடலின் லுக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரத்தியேகமான வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்டிவா பிரீமியம் ஸ்கூட்டர் மேட் மார்ஷல், மேட் சங்ரியா மற்றும் மேட் பேர்ல் ஆகிய மூன்று ஷேடுகளில் கிடைக்கிறது.



இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டருக்கு அழகு சேர்க்கும் வகையில் லோகோ, வீல் ரிம்கள் தங்க நிறத்தால் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பின் பிரீமியம் சிறப்பியல்புகளை அளிக்கும் வகையில் முன்பக்கத்தில் கோல்டன் இன்செர்ட்டுகளுடன் கூடிய ஃபாசியா பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக இருக்கைக்கு அருகில் ஆக்டிவா என்ற பெயர் தங்க நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. ஸ்கூட்டருக்கு ஒட்டுமொத்த டூயல்-டோன் ஷேட் வழங்க ஃபுட்போர்டு பகுதி மற்றும் இருக்கை ஆகியவை பழுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன.

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

6ஜி ஸ்கூட்டரில் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய பிரீமியம் பதிப்பில் 109.5-சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.7பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 8.84 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றக்கூடியது.



6ஜி ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்ட இஞ்சினுடன் இணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் தான் 6ஜி பிரீமியம் மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்பகுதியில் 130மிமீ டிரம் பிரேக் உள்ளது. அதிகபட்ச செயல்திறனுடன் சக்தியைப் பயன்படுத்த, ஹோண்டா சிபிஎஸ் (ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஹோண்டா ஆக்டிவா பிரீமியத்தில் த்ரி ஸ்டெப் அட்ஜஸ் டபுள் ஹைட்ராலிக் பொருத்தப்பட்டுள்ளது, இது சமதளம் நிறைந்த நிலப்பரப்புகளில் கூட சீரான பயணத்தை உறுதி செய்கிறது.

Also Read : இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்...  இந்த வகை ஹெல்மெட் அணிந்தால் அபராதம்.! 

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், சக ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களான டிவிஎஸ் ஜூபிட்டர், ஹீரோ மேஸ்ட்ரோ 110, சுஸுகி ஆக்ஸஸ், யமஹா ஃபேஸினோ ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஆக்டிவா 6ஜி பிரீமியம் மாடலை களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Honda Activa

அடுத்த செய்தி