Home /News /automobile /

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா ஆக்டிவா 125 பிரீமியம் வெர்ஷன்- விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டா ஆக்டிவா 125 பிரீமியம் வெர்ஷன்- விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ஸ்கூட்டரில் உள்ள மற்ற முக்கிய மாற்றங்களில் கருப்பு நிற ஃபிரண்ட் சஸ்பென்ஷனுடன் அதன் கருப்பு எஞ்சினும் அடங்கும்.

ஸ்கூட்டரில் உள்ள மற்ற முக்கிய மாற்றங்களில் கருப்பு நிற ஃபிரண்ட் சஸ்பென்ஷனுடன் அதன் கருப்பு எஞ்சினும் அடங்கும்.

ஸ்கூட்டரில் உள்ள மற்ற முக்கிய மாற்றங்களில் கருப்பு நிற ஃபிரண்ட் சஸ்பென்ஷனுடன் அதன் கருப்பு எஞ்சினும் அடங்கும்.

புதிய ஆக்டிவா பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக ஹோண்டா நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வாகனம் மேட் மேக்னிஃபிசென்ட் காப்பர் மெட்டாலிக் கொண்ட பேர்ல் அமேசிங் ஒயிட் மற்றும் மேட் ஏர்ல் சில்வர் மெட்டாலிக் உடன் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் ஆகிய இரண்டு டூயல் டோன் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டரின் டிரம் அலாய்க்கு ₹78,725 விலையும் & டிஸ்க் மாறுபாட்டிற்கு ₹82,280 விலையும் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா,“ மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு உண்மையான துணையாக, ஆக்டிவா ஸ்கூட்டர் நாடு முழுவதும் உள்ள 2 வீலர் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.

தற்போது ஆக்டிவா125 பிரீமியம் எடிஷனை அறிமுகப்படுத்துவதன் மூலம், தனித்துவமான டிசைன் குறிப்புகள் மற்றும் வண்ணத் திட்டங்களால் நேர்த்தியான மற்றும் பிரீமியம் பாணியை நாங்கள் கொண்டு வருகிறோம்," என்று கூறியுள்ளார். மற்றபடி மீதமுள்ள ஸ்கூட்டர் நிலையான ஆக்டிவா 125 போலவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்டைலிங் புதுப்பிப்புகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே சொன்னதுபோல ஸ்கூட்டர் டூயல்-டோன் பாடி நிறத்தைப் பெற்றுள்ளது. இது முன்புறத்தில் இருந்து சைடு பேனல்களுடன் நீட்டிக்கப்படுகிறது.

Also Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

மேலும், ஸ்கூட்டரில் உள்ள மற்ற முக்கிய மாற்றங்களில் கருப்பு நிற ஃபிரண்ட் சஸ்பென்ஷனுடன் அதன் கருப்பு எஞ்சினும் அடங்கும். ஹோண்டா ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லேம்பில் டூயல் டோன் விளைவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டர் பாடி கலர் கிராப் ரெயில் மற்றும் பிரீமியம் கிராபிக்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. அது உண்மையிலேயே தனித்துவமான தோற்றத்தை தருகிறது. மேலும், டெயில் லேம்பில் ஆக்டிவா 125 எம்போஸிங் இடம்பெற்றுள்ளது என்பதையும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகாடா இதுகுறித்து பேசுகையில், "ஆக்டிவா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மாற்றத்தின் உண்மையான கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

வரலாற்று ரீதியாக, ஆக்டிவா குடும்பத்தில் வரும் ஒவ்வொரு புதிய சேர்க்கையிலும், தயாரிப்பு தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஹோண்டா அதன் தலைமையைத் தொடர்கிறது. அதன்படி புதிய ஆக்டிவா125 பிரீமியம் எடிஷன் அதன் பிரீமியம் ஈர்ப்புடன் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும்," என்று கூறியுள்ளார். மேலும் வங்கத்தின் அம்சங்கள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
Published by:Archana R
First published:

Tags: Automobile, Honda, Two Wheeler

அடுத்த செய்தி