Home /News /automobile /

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை தயாரிக்க தயாராகி வரும் Hindustan Motors..!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை தயாரிக்க தயாராகி வரும் Hindustan Motors..!

Ambassador car

Ambassador car

Hindustan Motors | ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் Hindmotor ஆலை கடந்த 2014-ல் செயல்பாட்டை நிறுத்தியது. இந்நிலையில் இந்த அறிக்கையில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் மார்கெட்டிற்கு திரும்பினால், அது இந்திய வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
அம்பாசிடர் (Ambassador) கார்களுக்கு பெயர் பெற்ற இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (HM), வாகன சந்தைக்குள் மறுபிரவேசம் செய்ய தயாராகி வருகிறது. ஆனால் இந்த முறை தற்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப மின்சார வாகன தயாரிப்பு மூலம் வாடிகையாளர்களிடம் வந்து சேர திட்டமிட்டு உள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கொல்கத்தா அருகே உள்ள தனது ஹிந்த்மோட்டார் (Hindmotor) ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்காக ஐரோப்பிய எலெக்ட்ரிக் வெஹிகிள் நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் சேர்ந்து முதலில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்த கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவனம் ஆகிய இரண்டுக்கும் இடையில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க 2 நிறுவனங்களுக்கும் இடையிலான முழு செயல்முறையும் முடிவடைய சுமார் 3 மாதங்கள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான உத்தம் பாசு, முதலில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், பின் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய EV நிறுவனத்திற்கு இடையில் 51:49 என்ற ரேஷியோ அடிப்படையில் இந்த முன்முயற்சி தொடங்கும் என்றும், இதில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கட்டுப்பாட்டு பங்கை (controlling stake) கொண்டிருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.



ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் Hindmotor ஆலை கடந்த 2014-ல் செயல்பாட்டை நிறுத்தியது. இந்நிலையில் இந்த அறிக்கையில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் மார்கெட்டிற்கு திரும்பினால், அது இந்திய வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும். 1970-களில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில் சுமார் 75 சதவீத சந்தை பங்கை கொண்டிருந்தது. இந்நிறுவனம் புகழ்பெற்ற அம்பாசிடர் காரைத் தயாரித்து வந்தது. மாருதி 800 போன்ற மலிவு விலை கார்கள் நாட்டில் அறிமுகமாக தொடங்கியதும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாசிடர் கொஞ்சம் கொஞ்சமாக சவாலை எதிர்கொண்டது. மேலும் வாகனத் துறையில் வேகமாக மாறிய தொழில்நுட்பத்தை சமாளிக்க முடியாததன் விளைவாக அம்பாசிடர் காரின் விற்பனை குறைந்து ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read : என்னது.? இது ரெண்டும் ராயல் என்ஃபீல்டு பைக்கா - அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் 2 புதிய மாடல்கள்!

இதனிடையே துவக்கத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சில சீன EV நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும்,ஆனால் இறுதியாக ஒரு ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டு சேர முடிவு செய்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் HM நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ள ஐரோப்பிய நிறுவனம் சவுண்ட் டெக்னலாஜியை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி