இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Hero Maestro Xoom ஸ்கூட்டர் சந்தையில் இன்று (ஜனவரி 30 ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலையாக ரூ. 68,599 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுசுகி அவெனிஸ், ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற ஸ்கூட்டர்களுக்கு எதிராக ஹீரோ மேஸ்ட்ரோ ஜூம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி சென்டரின் (ICAT) அறிக்கை ஒன்று, Hero-வின் Maestro Xoom அறிமுகத்திற்கு முன் அதன் அனைத்து சிறப்பம்சங்கள் பற்றி வெளியிட்டது.
கடந்த வாரம் ஆன்லைனில் வெளியான ICAT-ன் அறிக்கையை படி எதிர்ப்பார்த்த சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் எதிர்பார்த்த விலையை விட கொஞ்சம் குறைந்த விலையிலேயே விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஹீரோவின் புதிய Maestro Xoom ஸ்கூட்டரானது LX, VX மற்றும் ZX உள்ளிட்ட 3 வேரியன்ட்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஷோரூம் விலைப்படி Xoom LX ரூ.68,599, Xoom VX ரூ.71,799 மற்றும் Xoom ZX ரூ.76,699 என்ற அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Polestar Blue, Black, Matt Abrax Orange and Pearl Silver White மற்றும் Sports Red போன்ற ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Maestro Xoom ஸ்கூட்டரின் மொத்த நீளம் 1,881 மிமீ ஆகும். இதன் அகலம் 731 மிமீ மற்றும் உயரம் 1,117 மிமீ. இதன் வீல்பேஸ் 1,300 மிமீ ஆகும். ஆல்-நியூ Maestro Xoom முற்றிலும் ரீடிசைன் செய்யப்பட்ட fascia-வுடனவெளிவந்துள்ளது. இது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரில் உள்ளதை விட அதிக ஆங்குலரில் இருக்கும். பெரிய எல்இடி ஹெட்லேம்புடன் டூயல்-டோன் பெயிண்ட் ஷேடில் ஸ்கூட்டரின் ஃப்ரன்ட் apron-ஐ காட்டுகிறது. இந்த ஸ்கூட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார்னரிங் ஹெட்லேம்ப் ஃபங்க்ஷன் மற்றும் 12-இன்ச் அலாய் வீல்ஸ் உள்ளிட்ட பல அப்மார்க்கெட் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டர் XTEC தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. USB சார்ஜருடன் இணைந்த front glove Box இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்,புளூடூத் வசதி மற்றும் LED லைட் வசதியுடன் இடவசதி உள்ளது.
இதனின் மொத்த எடை 108 கிலோ மற்றும் 5.2 லீட்டர் அளவு டாக்கில் எரிபொருள் நிரப்ப வசதி உள்ளது. ஸ்கூட்டர் பிரேக்கிங் பொருத்தவரை IBS வசதி இடம்பெற்றுள்ளது. முன் பகுதியில் telescopic hydraulic shock absorbers மற்றும் பின் பகுதியில் spring loaded hydraulic damper பிரேக்கிங் இடம்பெற்றுள்ளது. முன் பகுதி 190mm disc brake/130mm drum brake மற்றும் பின் பகுதி 130mm drum brake பெற்றுள்ளது.
புதிய Maestro Xoom ஸ்கூட்டரானது ஹீரோவின் 110.9cc சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 7,250 rpm-ல் 8.04 bhp மற்றும் 5,750 rpm-ல் 8.70 Nm பீக் டார்க்கை உருவாக்கும். இந்த இன்ஜின் CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
ஹீரோவின் புதிய அறிமுகமான Maestro Xoom வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஸ்கூட்டர் அனுபவத்தை அளிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க விலை ரூ.68,599 முதல் தொடங்குவதால் மக்கள் இதனில் மேல் ஆர்வம் காட்டுவர்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹீரோ Maestro Xoom LX, VX மற்றும் ZX பிக்கிங் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Hero, Scooters, Two Wheeler