Home /News /automobile /

ஃபுல் டிஜிட்டல் மீட்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் இந்தியாவில் அறிமுகமான ஹீரோவின் Splendor Plus XTEC.. விலை எவ்வளவு!

ஃபுல் டிஜிட்டல் மீட்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் இந்தியாவில் அறிமுகமான ஹீரோவின் Splendor Plus XTEC.. விலை எவ்வளவு!

Splendor Plus கம்யூட்டர் மோட்டார் சைக்கிள்

Splendor Plus கம்யூட்டர் மோட்டார் சைக்கிள்

Hero Splendor Plus XTEC | எஞ்சினை போலவே இந்த புதிய பைக்கின் ஹார்டுவேரும் ஸ்டாண்டர்ட் ஸ்பிளெண்டர் பிளஸைப் போலவே இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் டாஸ்க்ஸ் டெலஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் ட்வின் ரியர் ஸ்பிரிங்ஸ் மூலம் கையாளப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் அதன் பிரபலமான Splendor Plus கம்யூட்டர் மோட்டார் சைக்கிளின், புதிய வேரியன்டான Splendor Plus XTEC-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. Bajaj Platina, TVS Radeon மற்றும் Honda CD 110 Deluxe போன்றவற்றுக்கு போட்டியாக Hero Splendor Plus XTEC தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Hero MotoCorp நிறுவனம் மே 19ஆம் தேதி இந்தியாவில் அதன் புதிய Splendor+ XTEC பைக்கை ரூ.72,900 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய Splendor+ XTEC பைக்கானது 5 வருட வாரன்டியுடன் வருகிறது. மேலும் கேன்வாஸ் பிளாக், ஸ்பார்க்ளிங் பீட்டா ப்ளூ, பேர்ல் ஒயிட் மற்றும் டொர்னாடோ கிரே உள்ளிட்ட நான்கு புதிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப்பின் புத்தம் புதிய Hero Splendor+ XTEC பைக்கானது LED ஹை இன்டென்சிட்டி பொசிஷன் லேம்ப் (HIPL), முன்பக்கத்தில் LED ஸ்ட்ரிப் மற்றும் நியூ கிராபிக்ஸ் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இந்த பைக்கை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவரின் பாதுகாப்பிற்காகவும் புதிய Splendor+ XTEC பைக்கில், சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் மற்றும் சைட்-ஸ்டாண்ட் விஷுவல் இண்டிகேஷன் அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் இந்த பைக்கில் பேங்க்-ஆங்கிள்-சென்சார் (Bank-angle-sensor) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இருந்து பார்க்கும் கோணத்தைக் கண்டறியும் வாகன சென்சார் ஆகும். இது பைக் சாய்ந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்கக்கூடிய அதிகபட்ச சாய்வை தீர்மானிக்கிறது. பைக் சாயும் நேரத்தில் இன்ஜினை கட்-ஆஃப் செய்து விடும்.

புதிய Splendor Plus XTEC-ன் மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பது ப்ளூடூத் கனெக்ஷனுடன் கூடிய ஃபர்ஸ்ட்- ஃபுல் டிஜிட்டல் மீட்டர் ஆகும். இது இன்கம்மிங் & மிஸ்டு கால் அலெர்ட்ஸ், ரியல்-டைம் ஃப்யூயல் எஃபிசியன்சி இண்டிகேட்டர், டூ ட்ரிப் மீட்டர்ஸ், லோ ஃப்யூயல் எஃபிசியன்சி இண்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்களை வாடிகையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த பைக்கில் இன்டகிரேட்டட் யூஎஸ்பி போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த XTEC வேரியன்ட் இயந்திர ரீதியாக Standard Splendor Plus பைக்கிற்கு ஒத்ததாக உள்ளது.

இது 7.9hp, 8.05Nm, 97.2cc, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஹீரோவின் i3s ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருகிறது. சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்குவதை நோக்கமாக கொண்டு i3S (I3S (Idle Stop-Start System) தொழில்நுட்பத்தை இந்த பைக் பெற்றுள்ளது. 4 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்கின் மோட்டார் 7,000rpm இல் 7.9bhp மற்றும் 6,000rpm இல் 8.05Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது.

Also see... அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் ராயல் என்ஃபீல்டின் 2 புதிய மாடல்கள்.!

எஞ்சினை போலவே இந்த புதிய பைக்கின் ஹார்டுவேரும் ஸ்டாண்டர்ட் ஸ்பிளெண்டர் பிளஸைப் போலவே இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் டாஸ்க்ஸ் டெலஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் ட்வின் ரியர் ஸ்பிரிங்ஸ் மூலம் கையாளப்படுகிறது. இதன் 2 வீல்களிலும் டிரம் பிரேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. Hero MotoCorp-ன் ஸ்ட்ராட்டேஜி மற்றும் குளோபல் ப்ராடக்ட் பிளானிங் தலைவர் Malo Le Masson கூறுகையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அம்சங்களையும், ஸ்மார்ட்டான நவீன வடிவமைப்பையும் சேர்த்து Splendor+ XTEC மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hero

அடுத்த செய்தி