ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட் ரூ.64,470 விலையில் அறிமுகம்

ஹீரோ ஸ்ப்ளெண்டர்

இந்தியாவின் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ, ஸ்ப்ளெண்டர் + பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்டை ரூ.64,470 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் தற்போது புதிய இரு சக்கர வாகன பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில், தற்போது வெளியாகியுள்ள ஹீரோ ஸ்ப்ளெண்டர் + பிளாக் அண்ட் ஆக்சென்ட் வேரியண்ட்டானது ரூ.64,470 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன் பிளாக் அண்ட் ஆக்சென்ட் பதிப்பை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளுக்கு மூன்று கிராஃபிக் டிசைன்களில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

அவை வாங்கும் நேரத்தில் தேர்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் உள்ள அனைத்து ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் பீட்டில் ரெட், ஃபயர்ஃபிளை கோல்டன் மற்றும் பம்பில் பீ மஞ்சள் ஆகிய மூன்று வடிவமைப்பு தீம்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

ஸ்ப்ளெண்டர் + பிளாக் அண்ட் ஆக்சென்ட் பதிப்பில் இயந்திரம் மற்றும் சங்கிலி அட்டை கருப்பு நிறத்தில் மூடப்பட்டு ‘ஆல்-பிளாக்’ அவதாரத்தில் கிடைக்கிறது. அதில், கிராஃபிக் தீம்களுக்கு கூடுதலாக ரூ.899 செலவாகும். 3 டி ஹீரோ லோகோ மற்றும் ரிம் டேப் உள்ளிட்ட கிராபிக்ஸ் அடங்கிய முழுமையான கிட் மூலம் நீங்கள் மோட்டார் சைக்கிளை வாங்கினால், அதற்கு கூடுதலாக ரூ.1,399 செலவாகும்.Also read... வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது குறித்து குழப்பமா? தெரிந்து கொள்ளுங்கள்

பாடி கிராபிக்ஸ் இல்லாமல் இருக்கும் மோட்டார் சைக்கிள் விருப்பத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். நிறுவனத்தின் ‘ஹீரோ கோலாப்ஸ்’ போட்டியின் விளைவாக கிராபிக்ஸ் குறித்த இந்த தனித்துவமான கருத்து உருவானது. போட்டியின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் இருந்து பங்கேற்பாளர்கள் ஸ்ப்ளெண்டர் + மோட்டார் சைக்கிளுக்கு கிராஃபிக் வடிவமைப்பு கருப்பொருள்களை உருவாக்கினர். ஆயிரக்கணக்கான உள்ளீடுகளில், முதல் 3 வடிவமைப்புகள் உற்பத்திக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: