விரைவில் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ’எலக்டிரிக் ஸ்கூட்டர்’ அறிமுகம்..

எலக்டிரிக் ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டார் நிறுவனம் விரைவில் எலக்டிரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்த இருப்பது உறுதியாகியுள்ளது.

  • Share this:
இந்தியா எலக்டிரிக் வாகனங்களின் ஹப்பாக மாறி வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்கள் முதல் இந்திய நிறுவனங்கள் வரை அனைவரும் கார் மற்றும் இருசக்கர எலக்டிரிக் வாகனங்கள் தயாரிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனமான ஓலா நிறுவனம் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் பிரம்மாண்டமான எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

எலான் மஸ்கின் சொந்த நிறுவனமான டெஸ்லா, மும்பை மற்றும் பெங்களுரில் அலுவலகத்தை திறந்துள்ளது. முதல் கட்டமாக விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, படிப்படியாக கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் இறக்குமதி வரி, அந்த நிறுவனத்துக்கு சவாலாக இருப்பதாகவும், இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேபோல், மாருதி சுசூகி மற்றும் மகேந்திரா நிறுவனங்களும் எலக்டிரிக் கார்களை தயாரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஹீரோ மோட்டார் இந்தியாவும் விரைவில் எலக்டிரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது, ஹீரோ மோட்டார் நிறுவனம் தயாரித்துள்ள எலக்டிரிக் ஸ்கூட்டருடன் சேர்மன் பவன் முன்ஜால் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனம் விரைவில் எலக்டிரிக் ஸ்கூட்டரை வெளியிடும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Also Read : சியோமி எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் இத்தனை சிறப்பம்சங்களா ?

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்க்கூட்டரின் முன் பக்க சக்கரம் 12 இன்ச் மற்றும் அதனைவிட குறைவான அளவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பக்கம் சக்கரத்தின் அளவு 10 இன்ச், மற்றும் 5 ஸ்போக் அலாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிஸ்கோபிக் ஸ்போர்க், மோனோசார்ப் அப்சார்பர் ஆகிய முக்கிய அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹீரோ மோட்டார் நிறுவனத்தைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் எலக்டிரிக் மார்க்கெட்டில் விரைவில் நுழைவதற்கான முயற்சிகளை மிக மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த Gogoro நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் மூலம் பேட்டரி ஸ்பாப்பிங் டெக்னாலஜியை அந்த நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்து, எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், அதற்கேற்ப முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களின் கட்டமைப்புகளை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
 

 
Published by:Tamilmalar Natarajan
First published: