Hero motorcorp: ஜூலை 1ல் இருந்து வாகனங்களின் விலையை உயர்த்தும் ஹீரோ நிறுவனம்!

விலையேற்றம்

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் மே மாத விற்பனை 51 சதவீதம் குறைந்தது. மே மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 44 வாகனங்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது

  • Share this:
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், சுற்றுலா, வர்த்தகம் போன்ற துறைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. முக்கியமாக, ஆட்டோமொபைல் எனப்படும் வாகன சந்தை கடும் வீழ்ச்சியை கொரோனா பரவல் காரணமாக எதிர்கொண்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன விற்பனையும் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் மே மாத விற்பனை 51 சதவீதம் குறைந்தது. மே மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 44 வாகனங்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்நிலையில், ஜூலை ஒன்றாம் தேதிமுதல் பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின் விலையை உயர்த்தப் போவதாக ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்ததன் விளைவாக இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம்  விளக்கமளித்துள்ளது.  வாடிக்கையாளர்களுக்கு மேற்கொண்டு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  வாகனங்களின் மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகனங்களின் விலை 3வது முறையாக உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக நடப்பாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தனது நிறுவன வாகனங்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உயர்த்தியிருந்தது.

மாருதி சுசூகி நிறுவனமும் தனது கார்களின் விலையை நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் உயர்த்துவதாக அண்மையில் அறிவித்திருந்தது. ரெனால்ட், நிசான் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்களது வாகனங்களின் விலையை அதிகரித்தன.
Published by:Murugesh M
First published: