• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ப்ளூடூத் இணைப்புடன் கூடிய ப்ளெஷர்+ எக்ஸ்டெக் - ஹீரோ மோட்டோகார்ப் புத்தம் புதிய அறிமுகம்!

ப்ளூடூத் இணைப்புடன் கூடிய ப்ளெஷர்+ எக்ஸ்டெக் - ஹீரோ மோட்டோகார்ப் புத்தம் புதிய அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப்

இந்த சமீபத்திய ஹீரோ மோட்டோகார்ப்பின் முதல் புதிய அம்சமாக, ப்ரொஜக்டர் ஹெட்லைட் சேர்க்கப்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த திங்களன்று ஹீரோ மோட்டோகார்ப், இந்திய சந்தையில் புதிய Pleasure+ XTec ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் LX வேரியன்ட்டின் விலை ₹61,000 மற்றும் Pleasure+ 110 Xtec வேரியன்ட்டின் விலை ₹ 69,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டார்கார்ப்பின் இந்த புதிய ஸ்கூட்டர்கள் இப்போது புதிய அம்சங்களுடன் வருகிறது. இந்த மாடல்களில் புதிய அம்சங்களாக, ப்ளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் அனலாக் ஸ்பீடோமீட்டர், சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப், மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பண்டிகைக் காலத்தில், பலரும் புதிய வண்டிகளை வாங்க விரும்புவார்கள். இதையொட்டி இந்த காலகட்டத்தில் பல்வேறு புதிய ஸ்கூட்டர்களும் பைக்குகளும் அறிமுகப்படுத்தப்படும். தற்போது பண்டிகைகள் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப், தனது புதிய அறிமுகமான ப்ளெஷர்+ எக்ஸ்டெக் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் என்று கூறுகிறது. அதே நேரத்தில், சக போட்டி வாகனங்களுடன் சிறப்பாக போட்டியிடுவதற்காக, தற்போது நிறுவனம் அளித்த சலுகையில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணமாக, டிஜிட்டல் அனலாக் ஸ்பீடோமீட்டர், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்பு செயல்பாட்டுடன் வருகிறது. ஸ்கூட்டர் i3S தொழில்நுட்பத்தில் ஒரு ஐடில்-ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டமும் கொண்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு தரப்பிலிருக்கும் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் ஸ்கூட்டரைப் பற்றி விளக்கியது.

ஹீரோ மோட்டோகார்ப் சேல்ஸ் மற்றும் ஆஃப்டர்சேல்ஸ் தலைவரான நவீன் சவுஹான் “எங்களின் ஐகானிக் சின்னமான ப்ளெஷர், வாடிக்கையாளர்களுடன் மிகவும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது. தொகுக்கபப்ட்ட பல முதல்-பிரிவு அம்சங்களுடன் வரும் இந்த புதிய ப்ளெஷர்+ 'எக்ஸ்டெக்' நிச்சயமாக எங்கள் ஸ்கூட்டர் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும். மேலும் இந்த பண்டிகை கால கட்டத்தில் இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும்" என்று கூறினார்.

Also read... புக்கிங் ஓபன் செய்யப்பட்ட 1 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்த 25,000 யூனிட் மஹிந்திரா XUV700 - அதிரடி விலை உயர்வு!

ஹீரோ Pleasure+ Xtec ஹைலைட்டுகள்:

இந்த சமீபத்திய ஹீரோ மோட்டோகார்ப்பின் முதல் புதிய அம்சமாக, ப்ரொஜக்டர் ஹெட்லைட் சேர்க்கப்பட்டுள்ளது. 25% அதிக லைட் இன்ட்டன்சிட்டி மற்றும் நீண்ட, அகலமான ரீச், மற்றும், பனி-எதிர்ப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஸ்கூட்டரின் கண்ணாடிகளில், மஃப்ளர் பாதுகாப்பு, ஹேண்டில் பார், சீட் பேக் ரெஸ்ட் மற்றும் ஃபெண்டர் ஸ்ட்ரைப் ஆகியவத்ரில் குரோம் டிரீட்மென்ட் பெற்றுள்ளது. சீட் டூயல் டோன் நிறத்திலும், உட்புற பேனல்கள் வண்ணங்கள் பூசப்பட்டும் வருகிறது.

முன்புற மெட்டல் ஃபெண்டர் அதிக காலம் நீடிக்கும் அதே நேரத்தில், ​​சீட்டின் பேக்ரெஸ்ட்டும் பயணிகளுக்கு அதிக ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோ Pleasure+ XTec வண்ண ஆப்ஷன்கள்:

ஹீரோ ப்ளெஷர்+எக்ஸ்டெக் ஏழு வண்ணங்களில் வருகிறது, குறிப்பாக மிகவும் பிரத்யேகமான தோற்றத்துக்காக, ஜூப்ளியண்ட் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ Pleasure+ XTec engine:

இந்த ஸ்கூட்டர் 110 சிசி BS -6 இணக்க இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. இது 8 BHP, 7000 RPM உற்பத்தி செய்கிறது மற்றும் 8.7 NM-ஐ 5500-ன் டார்க்குகளில் வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: