ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ் : விலையை உயர்த்திய ஹீரோ நிறுவனம்!

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ் : விலையை உயர்த்திய ஹீரோ நிறுவனம்!

ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப்

செப்டம்பர் 22 முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் செப்டம்பர் 22 முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ. 1000 வரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடல்கள் மற்றும் சந்தைக்கு ஏற்ப இந்த விலை உயர்வு மாறக்கூடும்.

  இன்றைக்கு மக்கள் பொது போக்குவரத்துக்களைப் பயன்படுத்துவதைவிட இருசக்கர வாகனங்களைத்தான் அதிகளவில் உபயோகிக்கின்றனர். நினைத்த இடத்திற்கு எந்த நேரத்திலும் செல்ல முடியும். எப்போது வேண்டுமானாலும் வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்பது போன்ற பல காரணங்களுக்காகவே பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பண்டிகைக்காலம் நெருங்கும் சமயத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் தள்ளுபடியை அறிவிக்கும் என்பதால் அதற்காக மக்களில் சிலர் காத்திருப்பார்கள்.

  இதுப்போன்ற மனநிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றும் அளிக்கும் விதமாகதான் உள்ளது. தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ள பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை உயர்வு. தற்போது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் ரூ. 1000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  இந்தியாவில் Hero MotoCorp இன் தற்போதைய தயாரிப்பு போர்ட்ஃபோலியோ ரூ.55,450 முதல் ரூ.1,36,378 வரையிலான பதினான்கு மோட்டார் சைக்கிள்களையும் (எக்ஸ்-ஷோரூம்) ரூ.66,250 முதல் ரூ.77,078 வரையிலான நான்கு ஸ்கூட்டர்களையும் உள்ளடக்கியது (எக்ஸ்-ஷோரூம்). இதில் விலையைத் தவிர வாகனங்களில் எவ்விதமான மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  தற்போது ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் அறிவித்துள்ள விலை உயர்வு எவ்வளவு? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

  விலை உயர்ந்துள்ள பைக்குகளின் பட்டியல்:

  Splendor+: ரூ.70,658

  Splendor+ XTEC: ரூ 74,928

  எச்எஃப் டீலக்ஸ்: ரூ 59,890

  HF 100: ரூ 55,450

  Glamour XTEC: ரூ 84,220

  Passion XTEC: ரூ 75,840

  சூப்பர் ஸ்பிளெண்டர்: ரூ.77,500

  கிளாமர் : ரூ 77,900

  கிளாமர் கேன்வாஸ்: ரூ. 80,020

  பேஷன் ப்ரோ: ரூ 74,290

  எக்ஸ்ட்ரீம் 160ஆர்: ரூ 1,17,748

  XTREME 200S: ரூ 1,34,242

  XPULSE 200 4V: ரூ 1,36,378

  XPULSE 200T: ரூ 1,24,278

  விலை உயர்ந்துள்ள ஸ்கூட்டர்களின் விலை பட்டியல்:

  Pleasure+: Rs 66,250

  டெஸ்டினி 125 XTEC: ரூ. 70,590

  புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125: ரூ. 77,078

  மேஸ்ட்ரோ எட்ஜ் 110: ரூ. 66,820

  Read More: டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் வெளியிடப்பட்ட Jeep Grand Cherokee 4xe காரின் ஸ்பெஷல் எடிஷன்!

  டெல்லி உள்பட அனைத்து ஷோ ரூம்களிலும் விற்பனையில் உள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் இணைந்து நாட்டில் மின்சார இரு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bike, Hero, India, Motor, Scooters