இந்தியாவின் மிக பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் அதன் புதிய மற்றும் வரவிருக்கும் எலெக்ட்ரிக் வாகன பிராண்ட் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. வளர்ந்து வரும் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் மற்றும் வரவிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக விடா (Vida) என்ற புதிய பிராண்டை Hero MotoCorp அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் Vida பிராண்ட் லோகோவின் முதல் படத்தையும் வெளியிட்டுள்ளது.இது புதிய பிராண்டிங் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது. புதிய மின்சார இருசக்கர வாகனத்துடன் VIDA அதிகாரப்பூர்வமாக நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வரும் ஜூலை 1, 2022 அன்று Hero MotoCorp-ன் எமரிட்டஸ் தலைவர் டாக்டர் பிரிஜ்மோகன் லாலின் பிறந்தநாளை ஒட்டி Vida பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் டூ வீலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் Vida பிராண்டின் கீழ் முதல் மாடல் சித்தூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் டெலிவரி தொடங்கும் என்று அறிக்கை ஒன்றில் Hero MotoCorp தகவல் தெரிவித்துள்ளது.
Hero MotoCorp அதன் EV வணிகத்திற்காக ஒரு புதிய பிராண்டிங் துவக்க வேண்டிய காரணமாக Hero Electric பிராண்டின் இருப்பு அமைந்து இருக்கிறது. Hero MotoCorp நிறுவனமானது Hero Electric நிறுவனத்துடன் தங்கள் EV களுக்கு ‘ஹீரோ’ பிராண்டிங்கைப் பயன்படுத்துவது தொடர்பாக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே Hero MotCorp சில காலமாக அதன் EV வணிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த புதிய பிராண்டை ஏற்படுத்த முயற்சித்து வந்த நிலையில் தான் தற்போது Vida குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
also read | புதிய MINI Cooper SE எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Hero MotoCorp தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவன் முஞ்சால் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "vida என்றால் வாழ்க்கை மற்றும் இந்த பிராண்டின் ஒரே நோக்கம் உலகில் ஒரு நேர்மறை தாக்கத்தை உருவாக்குவது மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் நம் அனைவரையும் முன்னோக்கி நகர்த்துவது. நம் குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறையை கட்டமைக்க இந்தப் பெயர் சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் 17 வாரங்களில் உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் வகையில் எங்கள் Vida பிளாட்ஃபார்மின் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளியிட இருக்கிறோம். இந்த முயற்சியை நான் முன்னெடுத்து செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
Vida பிராண்டை சமீபத்தில் துபாயில் அறிமுகப்படுத்திய பவன் முன்ஜால் $100 மில்லியன் உலகளாவிய நிலைத்தன்மை நிதியை (Global Sustainability Fund) அறிவித்தார். இந்த நிதி BML முஞ்சால் பல்கலைக்கழகம் (BMU) மற்றும் Hero MotoCorp ஆகியவற்றின் மூலம் உலகளாவிய கூட்டாண்மைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ESG சொல்யூஷன்களில் 10,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோரை வளர்ப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும். Vida பிராண்ட் வளர்ந்து வரும் மொபிலிட்டி சொல்யூஷன்ளுக்கான எங்கள் முயற்சிகளை இயக்கும் மற்றும் உலகம் முழுவதும் மொபிலிட்டி ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கு வழிவகுக்கும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூறி இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.