முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 அறிமுகம்!

இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 அறிமுகம்!

Hero Maestro Xoom 110

Hero Maestro Xoom 110

Hero Maestro Xoom 110: ஹீரோ நிறுவனம் இந்த புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் என பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹீரோ நிறுவனம் Hero Maestro Xoom 110 ஸ்கூட்டரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல விதமான மாடல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கூட்டர்களைச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர். ஹீரோ நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், Hero maestro xoom 110 மாடல் பைக்குக்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள்? மற்றும் விலை? குறித்த முழு விபரங்கள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

Hero Maestro Xoom 110 விவரங்கள்:

இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்டைல்லாக மற்றும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் என பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Hero Maestro Xoom 110 என்ஜின் விபரங்கள்:

ஹீரோ நிறுவனம் தயாரிக்கப்படும் மற்ற மாடல்கள் பைக்குக்களை போன்று நல்ல செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வர உள்ள புதிய மாடல் ஸ்கூட்டரில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்படும். 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர் மற்றும் 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். மேலும் சேஸ் மற்றும் பிற பாகங்கள் மேஸ்ட்ரோ எட்ஜ் 110லிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இதோடு Hero Maestro Xoom 110 ஸ்கூட்டரில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக X வடிவ எல்இடி லைட். கூர்மையான டெயில் லைட் வழங்கப்படவுள்ளது. நிறுவனம் அதன் முக்கியமான தயாரிப்புகள் அனைத்தையும் X-டெக் மூலம் புதுப்பித்துள்ளது. எனவே, Xoom புதிய TFT டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு போன்றவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பிட்கள் பெரிய அளவில் மாறாமல் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : இந்தியாவில் வாகன விற்பனையை அதிகரிக்க ரூ.260 கோடியை முதலீடு செய்ய உள்ள ஹோண்டா நிறுவனம்.!

மேலும் ஸகூட்டரை நல்ல முறையில் கையாளுதல் மற்றும் சிறந்த செயல்திறனுக்காகப் பெரிய 12-இன்ச் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்களுடன் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த வாரம் ஹீரோ நிறுவனம் வெளியிடும் எனத் தெரியவந்துள்ளது.

ஸ்கூட்டர் விலை விபரங்கள்:

இதுவரை விலைக்கான விபரங்கள் எதுவும் சரியாகக் குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதும் ஹீரோ மேஸ்ட்ரோ xoom 110 ஸ்கூட்டர் ரூ. 75 ஆயிரத்தில் கிடைக்கப்பெறும் எனத் தெரியவருகிறது. இந்த மாடல் ஸ்கூட்டர்கள் ஹேண்டா ஆக்டிவா 6G பிரீமியம் மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டருக்கு போட்டியாக அமைய வாய்ப்புகள் உள்ளது.

First published:

Tags: Hero, Scooters