Home /News /automobile /

எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதிகளை அதிகரிக்க ஜியோ - BP யுடன் இணைத்த ஹீரோ நிறுவனம்!

எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதிகளை அதிகரிக்க ஜியோ - BP யுடன் இணைத்த ஹீரோ நிறுவனம்!

ஜியோ - BP யுடன் இணைத்த ஹீரோ நிறுவனம்

ஜியோ - BP யுடன் இணைத்த ஹீரோ நிறுவனம்

நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், மீண்டும் விற்பனையை அதிகரிக்கப் பல எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான  வசதிகளை வலுப்படுத்த jio-bp நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து உள்ளது. இந்த தகவலைச் சமீபத்தில் தெரிவித்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், இந்த பார்ட்னர்ஷிப்பின் மூலம், ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்கள் jio-bp-யின் பரவலான சார்ஜிங் மற்றும் ஸ்வாப்பிங் நெட்வொர்க்கிற்கான அணுகலைப் பெறுவார்கள் என்று கூறி இருக்கிறது. மேலும் இந்த பார்ட்னர்ஷிப் மூலம் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வேறு நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Jio-bp-யுடன் இணைந்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான மொபிலிட்டி சொல்யூஷன்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறி உள்ளது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம். தவிர Hero Electric மற்றும் Jio-bp ஆப்ஸ்களில் தடையற்ற வாடிக்கையாளர் பயணத்திற்கான தீர்வுகளை (seamless customer journey ) உருவாக்க இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் BP ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான Reliance BP Mobility, ‘Jio-bp’பிராண்டின் கீழ் இயங்குகிறது. அதே நேரம் Jio-bp அதன் EV சார்ஜிங் மற்றும் ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை Jio-bp pulse என்ற பிராண்டின் கீழ் இயக்குகிறது. Jio-bp pulse ஆப் மூலம் எலெக்ட்ரிக் டூ வீலர்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஸ்டேஷன்களை எளிதாக கண்டுபிடித்து தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தங்கு தடைகளின்றி சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய EV நெட்வொர்க்காக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது Jio-bp. நாட்டின் பெரிய EV நெட்வொர்க்குகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் Jio-bp, EV மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து ஸ்டேக் ஹோல்டர்களுக்கும் பயனளிக்கும் ஒரு எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஈகோசிஸ்டமை உருவாக்குகிறது.

    Also Read : இ.ஸ்கூட்டர்களின் பாதுகாப்பை நம்ப மறுக்கும் இந்தியர்கள்... சர்வேயில் வெளியான தகவல்

    இதனிடையே இந்த பார்ட்னர்ஷிப் பற்றி அறிக்கை ஒன்றில் கூறி இருக்கும் Jio-bp, மின்மயமாக்கலில் நாங்கள் உலகளாவிய அளவில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை இந்தியச் சந்தையில் கொண்டு வந்து சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்க அவற்றைப் பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் Jio-bp உணவு விநியோக நிறுவனமான Zomato-வின் கூட்டாளர்களால் இயக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப்பிங் வசதியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி சொல்யூஷன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இந்த 2 நிறுவனங்களுக்கிடையிலான பார்ட்னர்ஷிப், இந்தியாவில் E-மொபிலிட்டி துறையை மாற்றும் அதே வேளையில் EV வளர்ச்சியை நாட்டில் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Electric bike, Hero, Jio

    அடுத்த செய்தி