Home /News /automobile /

இ-பைக் விற்பனையில் எகிறும் ஹீரோ மோட்டர்ஸ்... ஓலா, ஏதர் சறுக்கல்

இ-பைக் விற்பனையில் எகிறும் ஹீரோ மோட்டர்ஸ்... ஓலா, ஏதர் சறுக்கல்

Hero Eddy

Hero Eddy

Hero Electric | எ ஒகினாவா (Okinawa) நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஜூலை 2022-ல் இந்தியாவின் நம்பர் ஒன் EV டூவீலர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் EV டூவீலர் வாகனப் பிரிவில் கடந்த ஜூலை மாதம் முழுவதும் சுமார் 8,952 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக்கை தொடர்ந்து ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் சுமார் 8,094 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை விவரங்களை சமீபத்திய VAHAN டேட்டாபேஸ் வெளிப்படுத்தியுள்ளது.

VAHAN டேட்டாபேஸ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, ஜூலை மாத விற்பனையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் முதல் இடத்திலும், ஒகினாவா இரண்டாம் இடத்திலும் உள்ளது. மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் முறையே ஆம்பியர், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனங்கள் உள்ளன.

VAHAN டேட்டாபேஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்றாலும், ஏதர் மற்றும் ஓலா போன்ற பிற முக்கிய நிறுவனங்கள் தங்கள் விற்பனை அட்டவணையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் 3,829 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்த ஏதர் எனர்ஜி நிறுவனம் ஜூலை மாதம் முழுவதும் சுமார் 1,279 EV எலெக்ட்ரிக் டூ வீலர்களை மட்டுமே விற்றுள்ளது. அதே போல ஜூன் மாதத்தில் 5,891 எலெக்ட்ரிக் டூ வீலர்களை விற்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஜூலையில் சுமார் 3,852 எலெக்ட்ரிக் டூ வீலர்களை மட்டுமே விற்பனை செய்து உள்ளது.



அதே போல கடந்த ஜூன் மாதத்தில் 6,542 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த ஆம்பியர் வெஹிகிள்ஸ் பிரைவேட் லிமிடெட், கடந்த ஜூலை மாதம் சிறிய சரிவிற்கிடையே 6,312 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. TVS மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்தில் 7-வது இடத்தில் இருந்து போது1,946 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஜூலையில் 4,244 யூனிட்டுகளை விற்பனை செய்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Also Read : பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்.!

நிபுணர்களின் கூற்றுப்படி EV இரு சக்கர வாகன விற்பனையில் காணப்படும் சரிவு, சமீபத்திய மாதங்களில் நிகழ்ந்த எலெக்ட்ரிக் டூவீலர் பேட்டரி தீ மற்றும் வெடிப்பு சம்பவங்களால் எலெக்ட்ரிக் டூ வீலர் பாதுகாப்பு குறித்து நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய போது பேட்டரி பிரச்னையால் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த அனைத்து EV எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric bike, Hero

அடுத்த செய்தி