Home /News /automobile /

எலெக்ட்ரிக் பைக்குகளை தவணை முறையில் எளிதாக வாங்கலாம் - Hero Electric நிறுவனத்தின் அட்டகாச திட்டம்..

எலெக்ட்ரிக் பைக்குகளை தவணை முறையில் எளிதாக வாங்கலாம் - Hero Electric நிறுவனத்தின் அட்டகாச திட்டம்..

Hero Electric

Hero Electric

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எளிமையான வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வழி செய்யும் வகையில், ஆக்ஸிஸ் பேங்க் உடன் இணைந்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களைக் கொண்ட வாகனங்களின் இயக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மற்றொருபுறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்ற பல்வேறு காரணங்களை கணக்கில் கொண்டு பயனாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். மேலும் அரசும் தனது பங்கிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரை மானியம் போன்ற சலுகைகள் கொடுத்து ஊக்குவித்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது விற்பனை மற்றும் பிராண்டை விளம்பரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எளிமையான வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வழி செய்யும் வகையில், ஆக்ஸிஸ் பேங்க் உடன் இணைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன தயாரிப்பில் சிறந்து விளங்கும், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும், சில்லறை கடன்களை விரைவாக வழங்க ஆக்சிஸ் வங்கி முடிவெடுத்துள்ளது.

இதனால் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் 750க்கும் மேற்பட்ட டீலர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனக் கடன் தவணை திட்டத்தின் கீழ் வாங்க முடியும். ஏற்கனவே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெற குறைவான ஆவணங்கள் உடன் விரைவாக கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களுடன் இணைந்துள்ள நிலையில், தற்போது ஆக்சிஸ் வங்கியுடனும் இணைந்துள்ளது அதிகப்படியான நபர்களை ஈர்க்க உதவும் என தெரிகிறது.

Also read:  வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த முயற்சியால், ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் டீலர்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கடன் தொகைகள் மற்றும் முதிர்வுகளை வழங்குகிறது. ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்கள் இதன் ஒத்துழைப்பின் மூலமாக குறைந்தபட்ச ஆவணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட கடன் உதவிகளை பெற முடியும்.

இதுகுறித்து ஹீரோ எலக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறுகையில் "கடந்த சில மாதங்களாகவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை கவனித்தோம். எனவே ஹீரோ வாகன டூவிலர் உரிமையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அவர்கள் சொந்தமாக்கி கொள்வதற்கும் எளிமையான அனுபவத்தை வழங்க நினைத்தோம். இந்திய சாலைகளை மின்மயமாக்குவதற்காக முதல் நிலை அல்லாத நகரங்கள் மற்றும், கிராமப்புற பயனாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :  முதல் முறையா கார் வாங்கியிருக்கீங்களா?... பயனுள்ள பராமரிப்பு டிப்ஸ்கள் இதோ...

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொருளாதார தீர்வுகளை வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ரீட்டீயில் பேங்க் நெட்வொர்க்தாரர்களுக்கு சிறந்த அனுவத்தை வழங்க காத்திருப்பதாகவும் ஆக்சிஸ் பேங்க் தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Automobile, Electric bike

அடுத்த செய்தி