• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நாடு முழுவதும் 10,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க Massive Mobility-யுடன் பாட்னர்ஷிப் வைத்த ஹீரோ எலெக்ட்ரிக்!

நாடு முழுவதும் 10,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க Massive Mobility-யுடன் பாட்னர்ஷிப் வைத்த ஹீரோ எலெக்ட்ரிக்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த பார்ட்னர்ஷிப் மூலம், ஹீரோ எலக்ட்ரிக் நாடு முழுவதும் EV சார்ஜிங் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.

  • Share this:
நாட்டின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், நாடு முழுவதும் புதிதாக EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக டெல்லியை தளமாக கொண்ட EV சார்ஜிங் சொல்யூஷன் நிறுவவனமான மாஸிவ் மொபிலிட்டி (Massive Mobility) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உளளதாகவும் ஹீரோ எலெக்ட்ரிக் குறிப்பிட்டு இருக்கிறது.

மாஸிவ் மொபிலிட்டியுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் சுமார் 10,000 புதிய EV சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்று ஹீரோ எலெக்ட்ரிக் சமீபத்தில் அறிவித்து உள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் அதிக மக்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்வதை அடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் EV வாகன தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க ஹீரோ எலெக்ட்ரிக் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

Massive Mobility முச்சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகன EV-க்களைச் சார்ஜ் செய்வதற்கான தீர்வுகளை கொண்ட ஸ்மார்ட் கனெக்டட் நெட்வொர்க்கை வடிவமைக்கும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அதன் கிளவுட் அடிப்படையிலான தீர்வுகள் மூலம், பயனர்களுக்கு சார்ஜிங் சேவைகளை வழங்க, பார்க்கிங் மற்றும் சார்ஜிங் பாயிண்ட் உரிமையாளர்களுக்கு உதவுகிறது. இதனிடையே அடுத்து வரும் ஒரு வருடத்தில் நாடு முழுவதும் புதிதாக 10,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்க EV ஸ்டார்ட்அப் மாசிவ் மொபிலிட்டியுடன் கைகோர்த்திருப்பதாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பார்ட்னர்ஷிப் மூலம், ஹீரோ எலக்ட்ரிக் நாடு முழுவதும் EV சார்ஜிங் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். தங்களது திட்டப்படி திறக்கப்படும் EV சார்ஜிங் ஸ்டேஷன்கள், அனைத்து மின்சார வாகனங்களுக்காகவும் திறந்திருக்கும் மற்றும் உற்பத்தியாளர்களிடையே அவர்களது தயாரிப்பை மேலும் தரப்படுத்த வழி வகுக்கும் என்று அறிக்கை ஒன்றில் ஹீரோ எலெக்ட்ரிக் கூறி இருக்கிறது.

Also read... டிரைவிங் டெஸ்ட்டில் ஃபெயிலாகும் நபர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் டெல்லி போக்குவரத்து துறை!

Massive Mobility-யுடன் சேர்ந்து சுமார் 10,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை சொந்தமாக அமைக்கவும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஹீரோ எலக்ட்ரிக் நிறுவன சிஇஓ சோஹிந்தர் கில் தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில், கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் அரசின் அறிவிப்புகள் EV தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவி வருகிறது. எனவே நாங்கள் எங்கள் வரம்பை விரிவுபடுத்த விரும்புகிறோம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்களை அமைத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் முயற்சியில் பங்கேற்க உள்ளோம். சார்ஜிங் உள்கட்டமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்க கடந்த சில ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் குறைந்த விலை சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடுவதில் முதலீடு செய்து வருகிறது. தற்போது வரை சுமார் 1,650 சார்ஜிங் ஸ்டேஷன்கள் வரை அமைத்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 20,000-மாக உயர்த்த இலக்கு கொண்டுள்ளோம் என்று கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: