எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நாட்டில் பெருகி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனமாக இருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக், சமீபத்தில் "நாட்டில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வெஹிகிள் பிராண்டாக"(the highest selling EV brand in India) மாறி இருக்கிறது.
நாட்டில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வெஹிகிள் பிராண்ட் என்ற டைட்டிலை பெற்றுள்ளதை பெருமையுடன் வெளிப்படுத்தி உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான EV-க்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை அளவு இந்தியாவின் EV மார்க்கெட்டில் 36 சதவீதத்தை பதிவு செய்துள்ளது. இது JMK ரிசர்ச் & அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டது.
சோலார், காற்று மற்றும் மின்சார இயக்கம் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை சேவைகளில் ஈடுபட்டுள்ள ஆலோசனை நிறுவனம் தான் இந்த JMK. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆட்டோ மொபைல் துறை மந்தநிலையை எதிர் கொண்ட போதிலும், நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்கள் மூலம் அதிக அளவில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கூறி இருக்கிறது.
ALSO READ | பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் BSA மோட்டார் சைக்கிள்கள்!
EV தயாரிப்பாளரான ஹீரோ எலெக்ட்ரிக் கடந்த ஜனவரி 2021 முதல், தற்போது வரை சுமார் 65,000-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்றுள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சோஹிந்தர் கில் கூறுகையில். "எங்கள் தயாரிப்புகள் மற்றும் ஹீரோ பிராண்டின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம் இது.
வாடிக்கையாளர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் வகையில் எங்கள் வணிகத்தை நியாயமான முறையில் நடத்தி வருவதற்காக இந்த நம்பர் 1 நிறைய பொறுப்புகளுடன் கிடைத்துள்ளது என்றே நாங்கள் நினைக்கிறோம். ஒரு தலைவராக, எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு ஏற்ப விரைவான மாற்றத்தை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.
ALSO READ | அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்தியாவில் நான்கு சக்கர வாகனங்களின் விலை உயர வாய்ப்பு!
நிலையான மற்றும் பூஜ்ஜிய கார்பன் போக்குவரத்தில் இந்தியா ஒரு பெரிய புரட்சியின் உச்சத்தில் உள்ளது. நாம் வாழும் உலகை வசிக்கவும், சுவாசிக்கவும் சிறந்த இடமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருக்க நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
Hero Electric நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களையும், 2000-க்கும் மேற்பட்ட EV சார்ஜிங் ஸ்டேஷன்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் அடுத்தடுத்து 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. தவிர உற்பத்தி மையங்களை விரிவுபடுத்தவும், வரும் 2025-க்குள் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட EV-க்களை தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.